குசலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குசலை[1] (Coping) என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும்.[2]

இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன:

 • ஆரல்[3],
 • எடுத்துக்கட்டி[4]
 • தலையீடு[5],
 • திரணை[6]
 • திரணைமேடு[7],
 • போடுதை[8]
 • மதிற்சூட்டு[9]

பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன. கவினெழில் நோக்கில் மதிற்சுவர் மொட்டையாக இராமல் தானே தனிப்பட்ட முறையிலும் அது சுற்றி வளைத்திருக்கும் கட்டடத்தின் தோற்றத்தோடு இணங்கியும் இருக்கும்படி அதன் குசலையை அமைக்கமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 2.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Coping". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press. 
 3. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 4. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 5. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 6. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 7. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 8. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
 9. Madras, University of (1924-1936). "Tamil lexicon".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசலை&oldid=2972353" இருந்து மீள்விக்கப்பட்டது