கீழையூர் ரங்கநாதப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழையூர் ரங்கநாதப் பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் நாகப்பட்டினத்திற்குத் தென்மேற்கில் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

பஞ்சரங்கத் தலங்கள்[தொகு]

திருவரங்கம், வட ரங்கம், ஆதி ரங்கம், மேல் ரங்கம், கீழ் ரங்கம் என்ற பஞ்சரங்கத் தலங்களில் கிழக்கே உள்ள கீழ் ரங்கம் கீழையூர் ஆகும். இத்தலம் பாண்டவர் வழிபட்ட பெருமையுடையது.

இறைவன், இறைவி[தொகு]

பாம்பணையில் வலது கரத்தை தலையின் அருகில் வைத்தபடி யோகநிஷ்டையில் ஆழ்ந்தது போல சயனித்த கோலத்தில் ரங்கநாதப்பெருமாள் உள்ளார். ரங்கநாயகித் தாயார், அதிரூபவல்லித்தாயார் என்ற பெயருடன் உள்ளார். [1]

அமைப்பு[தொகு]

மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்ட சற்றே மேட்டுப்பகுதியில் உள்ள கோயில். சோழர் காலத்துத் திருப்பணியைக் கொண்ட கோயிலாகும். மார்க்கண்டேயர் வழிபட்ட தலமாகும். தாயார் சன்னதி தனியாக உள்ளது. தாயார் சன்னதிக்கு முன்பாக பால ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ராமபிரான் சன்னதியும்,கோபாலகிருஷ்ணன் சன்னதியும் காணப்படுகின்றன. இகுள்ள ரங்கநாதரை வழிபடும்போது மேரு மலையைக் ண்டு பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தமே தன் கரங்களில் வந்து அமர்ந்தது போல உள்ளதாக மார்க்கண்டேயர் இயற்றிய பாடலில் கூறப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]