கீதா குரு-மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீதா குரு-மூர்த்தி ஆங்கில மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர், செய்தி வாசிப்பாளர், செய்தியாளர் ஆவார். இவர் பிபிசியில் 2013 ஆம் ஆண்டு முதல், பிபிசி நியூஸ் அட் நைன் எனும் நிகழ்ச்சியின் வழங்குனராகவும், பிபிசி உலகச் செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசை, பிபிசி 2 தொலைக்காட்சி அலைவரிசை, பிபிசி செய்தி அலைவரிசை ஆகியவற்றில் செய்தி வழங்குனராகவும் பணியாற்றிவர்.

ஆரம்ப கால வாழ்க்கையும், பணியும்[தொகு]

கீதா லிவர்பூலில் பிறந்து, லங்கசையர் கவுண்டியிலுள்ள மேற்கு பிரட்போர்டு எனும் சிற்றூரில் வளர்ந்தார். இவரின் தந்தை ஒரு ஊடுகதிரியலாளராக பர்ன்லே, பிளாக்பர்ன் ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.[1][2] இசைக் குழுக்களில் உறுப்பினராகவும், நாடகங்களில் பங்குபெறுபவராகவும், பாடல் குழு உறுப்பினராகவும் இருந்தார் கீதா. பின்னர், உயிர்வேதியியல் படித்துவிட்டு தனது பணிகளை மாற்றினார்.[1]

பிபிசியின் உள்ளூர் செய்தி நிகழ்ச்சியான பிபிசி லுக் நார்த் (யார்க்சையர் மற்றும் நார்த் மிட்லேண்ட்ஸ்) எனும் நிகழ்ச்சியின் செய்தியாளராகப் பணியாற்றினார். அதன்பிறகு சேனல் 5 எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி புரிந்தார்.[3][4] 2002 ஆம் ஆண்டில் பிபிசியின் ஏசியா டுடே, பிபிசி பிரேக்பாஸ்ட் ஆகிய நிகழ்ச்சிகளின் வழங்குனராகவும், பிபிசி வேர்ல்டு, பிபிசி நியூஸ் 24 ஆகிய அலைவரிசைகளில் செய்தி வழங்குனராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் பிபிசி ரேடியோ 4 வானொலியில் செய்தி வழங்குனராக பணியாற்றினார்.[1][5] கீதா 2002 ஆம் ஆண்டில் வேக்கிங் தி டெட் எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.

ஆண்-பெண் இருவருக்கிடையே நிலவும் ஊதிய வேறுபாட்டுக்கு எதிராக பிபிசியின் பெண் ஊழியர்கள் பரப்புரையில் ஈடுபட்டபோது, கீதாவும் பங்களித்தார்.[6]

02 பிப்ரவரி 2023 அன்று பிபிசி தனது செய்தி அலைவரிசையில் செய்த மாற்றங்களின்போது, 10 செய்தி வழங்குனர்கள் தமது பணியை இழந்தனர். இவர்களுள் கீதாவும் ஒருவராவார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிலிப் கொலின்ஸ் எனும் இதழியலாளரை 2002 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கீதா குருமூர்த்தி திருமணம் செய்தார்.[1][8] கீதாவின் இளைய தமையன் கிருஷ்ணன் குரு-மூர்த்தி என்பவர், சேனல் 4 நியூஸ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றுகிறார்.[5][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Walia, Nona (9 June 2002). "The World according to …". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/The-world-according-to-/articleshow/12368717.cms. "in the newsroom on September 11, that event was a turning point, Born in Liverpool, UK, … grew up in Lancashire. … a lot of theatre, played for orchestras and sang in choirs. … studied biochemistry, but changed … , … married … India on honeymoon," 
  2. Graham, Natalie (5 January 2003). "Fame & Fortune: TV newsman reports to his mother". https://www.thetimes.co.uk/article/fame-and-fortune-tv-newsman-reports-to-his-mother-zjpfx5626g7. "grew up with his sister, Geeta, and brother, Ravi, in Lancashire." 
  3. krishgm (5 February 2019). "Yes then she became a correspondent for Five News then BBC News" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. Sissons, Helen (2006). Waiting to Broadcast. Media, Communication and Culture Series. SAGE Publishing. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780761949268. https://books.google.com/books?id=2QHWJqK4UAoC&pg=PA113. 
  5. 5.0 5.1 Mendick, Robert (13 May 2005). "Go on, teach the f***er a lesson". Evening Standard (London). https://www.standard.co.uk/showbiz/go-on-teach-the-fer-a-lesson-7261017.html. "Speech writer and strategy adviser Philip Collins, 36, … married to a rising star of BBC news … Geeta Guru-Murthy, who presents news bulletins on BBC World, BBC News 24 and on Radio 4, and is the sister of Krishnan Guru-Murthy, … The couple have one child." 
  6. Press Association (22 July 2017). "Female BBC stars urge corporation to 'act now' on pay and gender". The Guardian. https://www.theguardian.com/media/2017/jul/22/female-bbc-top-talent-urge-corporation-to-act-now-on-pay-and-gender. 
  7. "BBC Cuts 10 Top Presenter Jobs Ahead Of News Channel Merger". Deadline Hollywood. 2 February 2023. Archived from the original on 27 July 2023.
  8. Collins, Philip James. Who's Who (UK). doi:10.1093/ww/9780199540884.013.U10000037. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-954088-4. http://www.ukwhoswho.com/view/10.1093/ww/9780199540884.001.0001/ww-9780199540884-e-10000037. பார்த்த நாள்: 20 December 2018. "m 2002, Geeta Guru-Murthy" 
  9. Greenstreet, Rosanna (7 July 2001). "My childhood home: Krishnan Guru-Murthy". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/finance/property/3290606/My-childhood-home-Krishnan-Guru-Murthy.html. "village called West Bradford, just outside Clitheroe in Lancashire. In 1974, … detached house on a new housing estate … me and my older sister, Geeta; and when I was seven, my little brother Ravi arrived. Dad's a doctor and was a consultant radiologist in Blackburn and Burnley, both about 12 miles away." 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_குரு-மூர்த்தி&oldid=3847866" இலிருந்து மீள்விக்கப்பட்டது