கிழக்குப் பிராந்தியம், சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்குப் பிராந்தியம்
சிங்கப்பூர் பிராந்தியங்கள்
1 bedok reservoir panorama 2010.jpg
Airport of Singapore, Crowne Plaza.JPG Singapur Strand.JPG
IKEA Tampines 42.JPG Singapore University of Technology and Design - 20150602-06.jpg
மேல் இடமிருந்து வலமாக: பெடோக் நீர்த்தேக்கம், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், பாசிர் ரிஸ் பூங்கா, தெம்பைன்ஸ்சில் IKEA நிறுவனம், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்
கிழக்குப் பிராந்தியம் ஆறு திட்டமிடல் பகுதிகளைக் கொண்டுள்ளது.
கிழக்குப் பிராந்தியம் ஆறு திட்டமிடல் பகுதிகளைக் கொண்டுள்ளது.
ஆள்கூறுகள்: 1°20′58.53″N 103°57′24.44″E / 1.3495917°N 103.9567889°E / 1.3495917; 103.9567889
நாடு சிங்கப்பூர்
திட்டமிடல் பகுதிகள்
சமூக மேம்பாட்டுக் கவுன்சில்
  • வட கிழக்கு சமூக மேம்பாட்டுக் கவுன்சில்
  • தென் கிழக்கு சமூக மேம்பாட்டுக் கவுன்சில்
Regional centreதெம்பினிஸ்
Largest PAபிடோக்
அரசு
 • மேயர்கள்வட கிழக்கு சமூக மேம்பாட்டுக் கவுன்சில்
  • தேஸ்மண்ட் சூ

தென் கிழக்கு சமூக மேம்பாட்டுக் கவுன்சில்

  • மலாய்கி உஸ்மான்
பரப்பளவு[1]
 • மொத்தம்93.1 km2 (35.9 sq mi)
மக்கள்தொகை (2015)[1]
 • மொத்தம்693,500
 • அடர்த்தி7,400/km2 (19,000/sq mi)

கிழக்குப் பிராந்தியம் என்பது சிங்கப்பூர் நகர அரசின் ஐந்து பிராந்தியங்களில் ஒன்றாகும். சிறிய நிலப்பகுதியாக இருந்தபோதிலும் ஐந்து பிராந்தியங்களில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பிராந்தியம் ஆகும். பிடோக் இப்பகுதியின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் ஆகும். இப்பகுதியின் பிராந்திய மையமாக தெம்பினிஸ் உள்ளது. இப்பகுதி 11,000 ஹெக்டேர் நிலப்பகுதி உள்ளடக்கி இதில் ஆறு திட்டமிடல் பகுதிகள் உள்ளன. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும், பயா லேபர் விமானத் தளமும் இப்பிராந்தியத்தில் அமைந்துள்ளன. [2]

அதுமட்டுல்லாமல் சாங்கி விமானப்படைத்தளம், சாங்கி கடற்படைத்தளம், 1936 இல் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட சிங்கப்பூரின் பழமையான சிறைச்சாலை ஆகியவை அமைந்துள்ளன.

புவியியல்[தொகு]

93.1 கிமீ 2 (35.9 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதி சிங்கப்பூர் தீவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது வட மேற்குப் பகுதியில் வட-கிழக்கு பிரந்தியம் தென் மேற்குப்பகுதியில் மத்தியப் பிராந்தியம் மற்றும் வடக்குப் பகுதியில் வடகிழக்கு தீவுகளுடன் நதி எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளன.

அரசு[தொகு]

கிழக்கு பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு சமூக மேம்பாட்டு மன்றங்களால் உள்நாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் ( North East CDC) மற்றும் தென் கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (South East CDC) ஆகியவை ஆறு வெவ்வேறு திட்டமிடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

திட்டமிடல் பகுதிகள்[தொகு]

திட்டமிடல்
பகுதி
பரப்பளவு (km2) மக்கட்தொகை அடர்த்தி (/km2)
பிடோக் 21.69 289,750 13,360.5
சாங்கி 40.61 2,530 62.3
சாங்கி வளைகுடா 1.7 0 0
பாசிர் ரிஸ் 15.02 139,890 9,313
பாயா லெபார் 11.69 40 3.4
தெம்பினிஸ் 20.89 261,230 12,506.2

பொருளாதாரம்[தொகு]

பிடோக், சாங்கி, பாசிர் ரிஸ், தெம்பினிஸ் மற்றும் பயா லெபார் ஆகிய திட்டமிடல் பகுதிகளிலுள்ள தொழில் பேட்டைகளின் உற்பத்திகள் மூலம் இப்பிராந்தியத்தின் பெரும்பகுதி பொருளாதார செயல்பாடுகளை உருவாக்குகின்றன. பாசிர் ரிஸ் மற்றும் தெம்பினிஸ் பகுதிகளில் மெல்லப்பச் சில்லு புனைவு பூங்கா, பல பெரிய அரைக்கடத்தி தயாரிப்பு நிறுவனங்களான குளோபல் பவுண்டரீஸ், யுஎம்சி, எசுஎசுஎம்சி மற்றும் சில்ட்ரானிக் போன்றவை இயங்குகின்றன. ஐபிஎம் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொழில்நுட்ப பூங்காவை தெம்பினிஸ் தொழிற்சார் நிழற்சாலையில் நிறுவி அதன் சீ அமைப்புச் சட்டகம் மற்றும் உயர்தர திறன் அமைப்புகளை ஆசியா முழுவதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தின் தலைமையிடம் சாங்கியில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் செயல்படுகிறது. சில்க் ஏர் நிறுவன தலைமையிடமும் சிங்கப்பூர் வான்வழிச் சேவையின் சூப்பர்அப் 1இல் ஐந்தாவது மாடியில் இயங்குகிறது. சிங்கப்பூர் வான்வழி சரக்குப் போக்குவரத்தின் தலைமை அலுவலகம் சாட்ஸ் வானூர்திக் கட்டண சரக்கு முனையம் 5 ல் (SATS Airfreight Cargo Terminal 5) அமைந்துள்ளது. ஜெட் ஸ்டார் ஆசியா, ஸ்கூட் மற்றும் வலூ ஏர் ஆகிய வான்வழி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் இயங்கி வருகின்றன. டைகர் வான்வழியின் தலைமை அலுவலகம் சாங்கி மையத் தொழிற்பூங்கா ஒன்றில் அமைந்துள்ள ஹனிவெல் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

கல்வி[தொகு]

கிழக்குப்பிராந்தியத்தில் அமைந்திருக்கும் பல நகரங்களில் இப்பகுதி வாழ் மக்களுக்கு முன் பருவக் கல்வி முதல் தொடக்கக் கல்வி தொடக்கம் மேல்நிலைக் கல்வி வரை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஐடிஈ கல்லூரி கிழக்கு, மெரிடியன் இளையோர் கல்லூரி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தெம்பினிஸ் இளையோர் கல்லூரி, தெமாசெக் இளையோர் கல்லூரி, தெமாசெக் பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் விக்டோரியா இளையோர் கல்லூரி, 6 சர்வதேச பள்ளிகளான உலகலாவிய இந்திய சர்வதேசப் பள்ளி (GIIS), கிழக்கு கடற்கரை வளாகம், என்.பி.எஸ் சர்வதேசப் பள்ளி, செக்கோலா இந்தோனேசிய சிக்கப்புரா, வெளிநாடுவாழ் குடும்ப பள்ளி மற்றும் தென்கிழக்காசியாவின் ஐக்கிய உலக கல்லூரி வளாகம் மேலும் சிறப்புத் தேவையுடையோர் பள்ளி, கட்டோங் பள்ளி போன்ற மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களும் இப்பிராந்தியத்தில் செயல்படுகின்றன.(APSN).

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 City Population - statistics, maps and charts | SINGAPORE: Regions
  2. "Key Statistics FY 2014/2015". Singapore Statistics (2015). மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.