கிளாரா செர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாரா செர்மன்
Clara Sherman standing in front of her woven Navajo rug
2007 ஆம் ஆண்டில் கிளாரா செர்மன்
பிறப்புநெசுபா கெளல்டு
(1914-02-18)பெப்ரவரி 18, 1914
நியூ மெக்சிகோவில் நியூ கோம்ப்பிற்கு அருகில்
இறப்புசூலை 31, 2010(2010-07-31) (அகவை 96)
தேசியம்அமெரிக்கர் நவஜோ மக்கள்
அறியப்படுவதுநெசவுத் தொழில்நுட்பம்
அரசியல் இயக்கம்நவாஜோ ரக்சு
விருதுகள்வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்தியக் கலைகளுக்கான தென்மேற்கு சங்கத்தின் விருது, ஆகத்து 2004; நியூ மெக்சிகோ ஆளுநரின் கலைகளுக்காக வழங்கப்படும் செம்மை விருது, 2006

கிளாரா நெசுபா செர்மன் (Clara Nezbah Sherman) (பிப்ரவரி 18, 1914 - சூலை 31, 2010) [1] [2] ஒரு நவாஜோ கலைஞர், குறிப்பாக நவாஜோ விரிப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவரது தாயார் பெயர் அஸ்தி இஸ்னி கிளான் மற்றும் இவரது தந்தையார் நாசாசி டினே ஆவர். இவர் ஒரு தத்தெடுக்கப்பட்ட சகோதரி உட்பட பத்து உடன்பிறப்புகளில் கடைசியாக எஞ்சியிருந்த உறுப்பினர் அவர். செர்மனும் அவரது உடன்பிறப்புகளும் கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற அவரது குடும்பத்தில் இருந்து குழந்தைகளாக இருந்த போதே நெசவு செய்ய கற்றுக்கொண்டனர். [3] கிளாரா தனது கணவர் ஜான் செர்மனுடன் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவரது மகள்கள் மற்றும் பேத்திகளும் நெசவு செய்ய கற்றுக்கொண்டனர்.

இவர் சுபிலம் (ஹார்மோனிகா) என்ற இசைக்கருவியை வாசித்தார், இக்கருவியில் ஒரே நேரத்தில் ஒரு மெல்லிசை மற்றும் தாழ்சுருதி வரியை தொடர்ந்து வைத்திருக்க முடியும்." [4]

2006 ஆம் ஆண்டில், கலைக்கான தேசிய அறக்கட்டளையுடன் இணைந்து நியூ மெக்சிகோவின் ஆளுநரால் கலையில் சிறந்து விளங்குவதற்கான ஆளுநர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. நியூ மெக்ஸிகோ ஆர்ட்ஸின் ஃபைபர் ஆர்ட்ஸ் டிரெயிலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டோட்லெனா டிரேடிங் போஸ்டில் காணக் கிடைக்கும் கலைஞர்களில் இவரும் ஒருவர். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Reweaving culture's fabric Navajo rugs see revival via outsider June 9, 2002, Denver Post, "And Winter bought new dentures for 87-year-old Clara Sherman, one of the best living Navajo weavers."
  2. "Clara Sherman Obituary - Newcomb, New Mexico". Tributes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  3. "Clara Sherman, Navajo Weaving". Convocations Indian Arts Research Center. 2006-07-14. Archived from the original on 2006-07-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
  4. 4.0 4.1 "Clara Sherman, 1914-2010". Home of Toadlena Trading Post and Navajo Two Grey Hills Weavings. Archived from the original on 2013-12-07. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09."Clara Sherman, 1914-2010". Home of Toadlena Trading Post and Navajo Two Grey Hills Weavings. Archived from the original on 2013-12-07. Retrieved 2013-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாரா_செர்மன்&oldid=3741642" இலிருந்து மீள்விக்கப்பட்டது