கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க்ரௌவுன் பிளாஸா சென்னை அடையாறு பார்க் (Crowne Plaza Chennai Adyar Park) என்று அழைக்கப்படும் இது ஷெரடன் பார்க் ஹோட்டல் மற்றும் டவர்ஸ் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்தது. இது ஒரு ஐந்து நட்சதிர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதி ஆகும். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள டிடிகே சாலையில் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

AGHL ஆல் அடையாறு பார்க் ஹோட்டல் என்ற பெயருடன் முதலில் கட்டப்பட்டது. பிப்ரவரி 1985 இல் 250 அறைகள் கொண்ட ஹோட்டலாக வெல்கம் குழு வாங்கியது. இதன் கட்டுப்பாட்டு உரிமைகளை கோயல் குடும்பம் மொத்தமாக 30 மில்லியனுக்குப் பெற்றது.[2] பின்னர் அந்த குழு, ஹோட்டலின் பெயரை ஷெரடான் பார்க் ஹோட்டல் மற்றும் டவர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தது. AGHL உடைய மூன்று இடங்களும் ஐடிசி ஹோட்டல்களால் நிர்வகிக்கப்பட்டது.

பின்னர் மே1, 2015 இல் இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் குழு ஹோட்டலை வாங்கிய பிறகு, ஹோட்டலின் பெயர் க்ரௌவுன் பிளாஸா சென்னை அடையாறு பார்க் என்று மாற்றம் செய்யப்பட்டது.[3]

இருப்பிடம்[தொகு]

சென்னையின் பொருளாதார மற்றும் வணிக மையத்திற்கு மிகவும் அருகில் டிடிகே சாலை அமைந்துள்ளது. அங்கு அமைந்துள்ள இந்த ஹோட்டல் பல்வேறு பெருநிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலும், வேர்ல்பூலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை டிரேட் மையத்திலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவிலும், அமெரிக்க தூதரகத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்டாண்டன்ட் சேர்டர்ட் வங்கியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், டெட்ஸ்க் வங்கியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சிட்டி வங்கியிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், அப்பல்லோ மருத்துவனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், ஐபிஎம்’மில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த பிரபலமான பகுதிகளில் இருந்து ஹோட்டலை மிக எளிதாக அணுக முடியும்.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், கபாலீஸ்வரர் கோவில், இராமேஸ்வரம், கோவலாங்க், கன்னியாகுமரி ஆகிய இடங்கள் ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

க்ரௌவுன் பிளாஸா சென்னை அடையாறு பார்க் ஹோட்டலுக்கு அருகே அமைந்திருக்கும் போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு: சென்னை சர்வதேச விமான நிலையம் – 12 கிலோ மீட்டர் (தோராயமாக) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் – 10 கிலோ மீட்டர் (தோராயமாக)

ஹோட்டல் விவரங்கள்[தொகு]

283 அறைகளையும், 32 சூட்களையும், ஐந்து உணவகங்களையும் கொண்டுள்ள இந்த ஹோட்டல் எட்டு அடுக்குமாடிகளைக் கொண்டுள்ளது. இது சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Now It's Crowne Plaza Chennai Adyar Park". newindianexpress.com. 7 May 2015. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  2. "Adyar Gate Hotels Limited" (PDF). icra.in. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  3. "Starwood loses Chennai hotel to IHG". indiagazette.com. 3 May 2015. Archived from the original on 12 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)