கிரேட் ஜெனரல் டி. ஆர். அப்துல் ஹரிஸ் நாசுஷன் அருங்காட்சியகம் ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரேட் ஜெனரல் டி.ஆர். அப்துல் ஹரிஸ் நாசுஷன் மியூசியம்
MuseumJendralAHNasution.jpg
அருங்காட்சியக முகப்பின் தோற்றம்
நிறுவப்பட்டது3 டிசம்பர் 2008
அமைவிடம்ஜேஎல். டேகு உமர் 40, கோண்டாங்டியா, மென்டெங், ஜகார்த்தா, இந்தோனேசியா
வகைஇந்தோனேசிய தேசிய நாயகர் அருங்காட்சியகம்


கிரேட் ஜெனரல் டி.ஆர். அப்துல் ஹரிஸ் நாசுஷன் மியூசியம் (Great General DR. Abdul Haris Nasution Museum) (அதிகாரப்பூர்வமாக இந்தோனேசியம்: Museum Sasmitaloka Jenderal Besar DR. Abdul Haris Nasutionஅப்துல் ஹரிஸ் நாசுஷன் என அழைக்கப்படுகிறது) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

டி.ஆர். அப்துல் ஹரிஸ் நாசுஷன் அருங்காட்சியகம் மென்டெங்கில் அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் ஜகார்த்தாவின் முக்கிய காலனித்துவ பகுதியாக இருந்து வந்தது. தற்போது இப்பகுதியில் அதில் பல அருங்காட்சியகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. நாசுஷனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

கிரேட் ஜெனரலாக இருந்த அப்துல் ஹரிஸ் நாசுஷன் என்பவரின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த கலைப்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அவர் முக்கிய இராணுவ பிரமுகர் ஆக மட்டுமல்லாது அப்போதைய இந்தோனேசிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார். 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிச ஆட்சி கவிழ்ப்பு இயக்கத்தின் போது தப்பிக்க முயன்று, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார். 1949 ஆம் ஆண்டில் இந்தோனேசிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக அவர் இருந்தது முதல் 2000 செப்டம்பர் 6 ஆம் நாளன்று அவர் இறக்கும் வரை இந்த அருங்காட்சியகம் முதலில் நாசுஷன் மற்றும் அவரது குடும்பத்தினரின் இல்லமாக இருந்தது. செப்டம்பர் 30, 1965 ஆம் நாளன்று, கக்ராபிராவா ஜி 30 எஸ் / பி.கே.ஐ.யின் துருப்புக்கள் நாசுஷனைக் கடத்தி கொலை செய்ய முயன்றன.அப்போது நாசுஷன் அந்த முயற்சியில் இருந்து தப்பித்தார். ஆனால் அவருடைய மகளானஅடே இர்மா சூர்யானி நாசுஷன் மற்றும் முதல் லெப்டினன்ட் ஆகப் பணியாற்றிய பியர் டெண்டியன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

காட்சிப் பொருள்கள்[தொகு]

1965 ஆம் ஆண்டு முதல் நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக விவரிக்கும் வகையில் காட்சிப்பொருள்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவரது மகள், அவர்களுடைய தாயுடன் இருக்கும் மாதிரியானது பார்ப்பவர்களின் மனதைத் தொட்டுவிடும். முதலில் அருங்காட்சியகத்திற்குள் செல்லும்போது அங்கே இரண்டு பீரங்கிகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அப்துல் ஹரிஸ் நாசுஷன் சிலையைக் காணமுடியும். மேலும் அருங்காட்சியகத்தின் உள்ளே சில கத்தி வகைகள், வாள் மற்றும் நாசுஷன் பயன்படுத்திய துப்பாக்கி சேகரிப்புகள் ஆகியவற்றைக் காணலாம். அவர் அணிந்திருந்த சில இராணுவ சீருடைகள் மற்றும் ஆடைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளை விளக்கும் வகையிலான டியோராமாக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்திய படுக்கையறை மற்றும் வீட்டிலுள்ள பெரும்பாலான தளவாடங்களை பார்வையாளர்கள் காண வசதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ​​அவரது வாழ்க்கையின் முக்கிய இராணுவ நிலைகளை சுருக்கமாக வெளிப்படுத்துகின்ற ஒரு நினைவுச்சின்னமாக இது அமைந்துள்ளது. அவர் பயன்படுத்திய வாகனமும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1] மேலும் ஜி-30-எஸ் பி.கே.ஐ, 30 செப்டம்பர் 1965 தொடர்பான சில டியோராமாக்களின் தொகுப்பு உள்ளது.

காட்சி நேரம்[தொகு]

இந்தோனேசிய இராணுவம் மற்றும் சர்வாதிகாரம் மற்றும் காலனித்துவத்தை முறியடிப்பதற்கான போராட்டம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடமாக உள்ள அருங்காட்சியகத்தில் அப்துல் ஹரிஸ் நாசுஷன் அவர்களின் தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் மென்டெங்கில் உள்ள ஜலான் டீக்கு உமருக்கு நேரடியாக அருகில் அமைந்துள்ளது. சாலையிலிருந்து அருங்காட்சியகத்தை எளிதில் காணமுடியும். 20 வினாடிகளுக்குள் நுழைவாயிலுக்குச் செல்லலாம். இந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமை விடுமுறையாகும். இதனை செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 வரையிலும், வெள்ளிக்கிழமை மட்டும் காலை 8.00 மணி முதல் 11.30 மணி, அடுத்து 1.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வையிடலாம்.[1]

குறிப்புகள்[தொகு]