உள்ளடக்கத்துக்குச் செல்

கிரீன் சோன் (ஆங்கிலத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீன் சோன்
இயக்கம்பால் கிரீன்கிராஸ்
கதைப்ரைன் ஹெல்ஜ்லேன்ட்
இசைஜான் பவெல்
நடிப்புமேட் டேமோன்..
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடு2010
ஓட்டம்115 நிமிடங்கள்
மொழிஆங்கிலம், அராபி
ஆக்கச்செலவு$100 மில்லியன்

கிரீன் சோன் (Green Zone, பச்சை வலயம்) 2010 ஆம் ஆண்டில் ஈராக் போர் பற்றி ஆங்கிலத்திலும் அராபியிலும் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் கரு 2006 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் ராஜீவ் சந்த்ரசேகரனால் எழுதப்பட்ட ’இம்பீரியல் லைஃப் இன் த எமரால்டு சிட்டி’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் அமைந்தது. இது அரசியல் திரைப்படமாகவும், அமெரிக்க எதிர்ப்பு திரைப்படமாகவும் முத்திரை குத்தப்பட்டது. இத்திரைப்படம் சாதகமான விமர்சனங்களைப் பெற்ற போதும், வசூல் அளவில் பெரிய வெற்றி பெறவில்லை.

ஆயுதங்கள் இருப்பதற்கான சான்று இல்லாத போதும் எவ்வாறு தனது வீரர்களை தவறான போர்க்களத்தில் ஒரு வல்லரசு இறக்குகிறது என்பதையும், உண்மையை தன் நாட்டு வீரர்களிடம் இருந்தே எவ்வாறெல்லாம் மறைக்கிறது என்பதையும் இத்திரைப்படம் சொல்கிறது

மேற்கோள்கள்[தொகு]