கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன்

கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன் ( Crystal Catherine Eastman 1881 சூன் 25 -1928 சூலை 8) என்பவர் அமெரிக்க சட்ட அறிஞர், பெண்ணியலாளர், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார்.[1] பெண்களின் அவலங்களுக்கு எதிராகப் போராடியவர். தி லிபேரேட்டர்  என்ற  கலை மற்றும் அரசியல் இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். அமெரிக்கன் சிவில் உரிமை யூனியனைத் தோற்றுவித்தார்.  நேசனல் விமன் ஆல் ஆப் பேம் என்ற அமெரிக்க அமைப்பில் இவருடைய பெயரையும் சேர்த்து, இவரைப் பெருமைப் படுத்தியுள்ளனர் 

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

கிரிஸ்டல் ஈஸ்ட்மன் மாசசூசட்சில், மாரல்பரோ என்ற ஊரில் பிறந்தார். 1883 இல் இவருடைய குடும்பம் நியூயார்க்கு சென்றது. இவர் சோசலிசவாதியான மாக்ஸ் ஈஸ்ட்மன் என்பவரின் சகோதரியாவார்.[2] கிறிஸ்டல் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பின்னர் நியூ யார்க்குப் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து பட்டமும் பெற்றார்.

செயல்பாடுகள்[தொகு]

சமூகச் செயல்களில் முனைப்பானவரும் பத்திரிகையாளருமான பால் கெல்லாக் என்பவர்  உழைப்பாளர்களின் வாழும் நிலைகளை நேரில்  பார்த்து ஆய்வு செய்யும் பணியை  ஈஸ்டமன்னிடம்  ஒப்படைத்தார்.[1][3] வேலை விபத்துகளும் சட்டமும் என்ற தலைப்பில் ஈஸ்ட்மன் அளித்த அறிக்கை பிரசித்தமானது. தொழிலாளர்களுக்கு இழப்பு ஈடு வழங்கவும் சட்டமாக இயற்றவும்  இந்த அறிக்கை  அடிப்படையாக அமைந்தது. நியூயார்க்கு மாநில கமிசனில் ஈஸ்ட்மன் பணியாற்றும்போது இந்தச் சட்ட வரைவை இயற்றினார். உட்ரோ வில்சன் அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த போது,  தொழிலாளர்கள் உறவு பற்றிய அமெரிக்கக் குழுவின் பணியில் ஈஸ்ட்மன் ஈடுபட்டார். தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, உடல் நலம் குறித்து ஆய்வு செய்தார்.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 "Crystal Eastman". Encyclopædia Britannica. 18 October 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Crystal Eastman". National Women's History Museum. 23 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 October 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Labor Center:  Crystal Eastman". Indiana University of Pennsylvania. 8 June 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 October 2011 அன்று பார்க்கப்பட்டது.