கிரிட்டினிஸம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தைகள் பிறக்கும் போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால் கிரிட்டினிஸம்(Cretinism) ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாவன, நரம்பு மண்டல வளர்ச்சி தடைபடுதல், உடல் வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படுதல், நாக்கு வெளியே தள்ளுதல், வயிற்றுப் பகுதி வீக்கமுற்று காணப்படுதல், அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம் குறைதல், உடலின் வெப்பநிலை குறைதல், எலும்பு உறுப்புகளின் வளர்ச்சி குன்றுதல் மற்றும் பருவ முதிர்ச்சி அடையாதலினால் பால் பண்புகளின் வளர்ச்சி தடைபடுதல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிட்டினிஸம்&oldid=1356071" இலிருந்து மீள்விக்கப்பட்டது