உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிஜா (தெலுங்கு: గిరిజ) என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகை மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார்.[1] இவர் 1950 கள் மற்றும் 1960 களிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1938 மார்ச் 3 அன்று ஆந்திரப் பிரதேசம் கங்கிபடு என்ற இடத்தில் பிறந்தார். கஸ்தூரி சிவராவ் என்பவரின் இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளியான பரமானந்தாயா சிஷ்யுல கதா என்பதில் முதன் முதலாக நடித்தார். இவர் ரெலங்கி வெங்கடராமையா என்பவருடன் நிறைய திரைப்படங்களில் நடித்தார். இவர்கள் சிறந்த நகைச்சுவை சோடிகளாக அறியப்பட்டார்கள். 1951 இல் வெளியான பாதாள பைரவிதிரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் போற்றப்படுகிறது.

1950களில் இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சி. சன்யாசி ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சி. சன்யாசி ராஜா என்பவர் விஜயா கிரி தவ்வா புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தினை நடத்தி வந்தார்.

இவர்களுடைய மகளான சலீமா என்பவர் மலையாளத் திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. https://www.filmibeat.com/celebs/girija-old-tamil-actress/biography.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஜா&oldid=2719437" இலிருந்து மீள்விக்கப்பட்டது