உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிகோரி ஹைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிகோரி ஆலிவர் ஹைன்ஸ் (Gregory Oliver Hines பிப்ரவரி 14, 1946 - ஆகஸ்ட் 9, 2003) ஓர் அமெரிக்க நடனக் கலைஞர், நடிகர், பாடகர் மற்றும் நடன இயக்குனர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஹைன்ஸ் நியூயார்க் நகரில் பிப்ரவரி 14, 1946 இல் பிறந்தார். இவரது தாய் அல்மா அயோலா (லாலெஸ்) மற்றும் இவரது தந்தை மாரிஸ் ராபர்ட் ஹைன்ஸ் ஒரு நடனக் கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். [1] இவர் ஹார்லெமின் சுகர் ஹில் பகுதியில் வளர்ந்தார். ஹைன்ஸ் இரண்டு வயது முதல் ஆடத் துவங்கினார். மேலும் ஐந்து வயதில் அரை தொழில்முறை அல்லாத நடனங்களை ஆடத் தொடங்கினார். அதன் பிறகு, அவரும் அவருடைய மூத்த சகோதரர் மாரிசுடன் இணைந்து நடனமாடினர்.

கிரிகோரி மற்றும் மாரிஸ் ஆகியோர் ஹோவர்ட் சிம்ஸ் மற்றும் தி நிக்கோலஸ் பிரதர்ஸ் போன்ற மூத்த டேப் நடனக் கலைஞர்களுடன் இனைந்து கல்வி பயின்றனர். இரண்டு சகோதரர்களும் தி ஹைன்ஸ் கிட்ஸ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இரவு விடுதிகளிலும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.பின்னர் தி ஹைன்ஸ் பிரதர்ஸ் என்று அழைக்கப்பட்டனர். அவர்களது தந்தை இந்தக் குழுவில் சேர்ந்தபோது 1963 ஆம் ஆண்டில் இந்தக் குழுவின் பெயரானது ஹைன்ஸ், ஹைன்ஸ் அண்ட் டேட் என்று மாற்றப்பட்டது.

தொழில்

[தொகு]

விருதுகள்

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பாட்ரிசியா பனெல்லா மற்றும் பமீலா கோஸ்ல அகியோருடன் இவர் திருமணம்செய்து கொண்டார். இந்த இரு திருமணமும் விவாகரத்தானது. இவருக்கு சாக் என்ற மகனும், டேரியா என்ற மகளும், ஜெசிகா கோஸ்லோ என்ற மாற்றாந் தாய் மகளும், ஒரு பேரனும் இருந்தனர்.

இறப்பு

[தொகு]

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆகஸ்ட் 9, 2003 ஆம் ஆண்டில் ஹைன்ஸ் கல்லீரல் புற்றுநோயால் இறந்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் அவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தகவல் கொடுத்தார். அவர் இறக்கும் போது, லிட்டில் பில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்தது.மேலும் அவர் நெக்ரிதா ஜெய்தேவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். [2] ஒன்ராறியோவின் ஓக்வில்லில் உள்ள செயிண்ட் வோலோடிமரின் உக்ரேனிய கத்தோலிக்க கல்லறையில் ஹைன்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. [3]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]

1979 ஆம் ஆண்டில் யூபி! திரைப்படத்தில் நடித்ததற்காக தியேட்டர்வேர்ல்டு விருது . 1988 ஆம் அண்டில் ரன்னிங் ஸ்கேர்டு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான இமேஜ் விருது .1992 ஆம் அண்டில் ஜெல்லீஸ் லாஸ்ட் ஜேம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான டோனி விருது மற்றும் டிராமா டெஸ்க் விருது. 1998 ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது. 2003 ஆம் ஆண்டில் லிட்டில் பில் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததற்காக எம்மி விருது


சான்றுகள்

[தொகு]
  1. "Gregory Hines Biography (1946-)". www.filmreference.com.
  2. Dunning, Jennifer (August 11, 2003). "Gregory Hines, Versatile Dancer and actor, Dies at the age of 57". The New York Times. https://www.nytimes.com/2003/08/11/arts/gregory-hines-versatile-dancer-and-actor-dies-at-57.html. 
  3. "Gregory Hines buried in Oakville City, Ontario". http://www.cbc.ca/news/canada/story/2003/08/18/hines_oakville030818.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோரி_ஹைன்ஸ்&oldid=2905528" இலிருந்து மீள்விக்கப்பட்டது