உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 3
1057 வாண்டா ஆகத்து 16, 1925
1058 குருப்பா ஜூன் 22, 1925
1709 உக்ரைனா ஆகத்து 16, 1925
பெரிய ஒளியியல் தொலைநோக்கிகளுக்குச் சாய்னின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன் (Grigory Abramovich Shajn) (உருசியம்: Григорий Абрамович Шайн) (ஏப்பிரல் 19, 1892 – ஆகத்து 4, 1956) ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். ஆங்கிலத்தில் இவரது பெயர் இழ்சாயின் எனவும் கண்டுபிடிப்புகளில் ஜி. இழ்சாய்ன் எனவும் சிலவேளைகளில் இசுசாய்ன் எனவும் வழங்கப்படுகிறது.[சான்று தேவை]

இவர் உருசிய வானியலாளரான சன்னிகோவா (Sannikova) (Санникова) எனப்படும் பெலகேயா சாய்ன் (Pelageya Shajn) (Пелагея Фёдоровна Шайн) என்பாரின் கணவர் ஆவார்.

இவர் விண்மீன் கதிர்நிரலியலிலும் வளிம ஒண்முகில்களின் இயற்பியலிலும் ஆய்வு செய்தார். இவர் ஆட்டோ சுத்ரூவ அவர்களுடன் இணைந்து, வேகமாகச் சுழலும் இளம் கதிர்நிரல்வகை விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றின் ஆர விரைவுகளை அளந்தார். இவர் புதிய வளிம ஒண்முகில்களையும் உடுக்கண வளிமண்டலங்களில் 13C இன் செறிவையும் கண்டுபிடித்தார்.

இவர் 1939 இல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினரானார். இவர் அரசு வானியல் கழகம் போன்ற பல அயல்நாட்டு கழகங்களில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1945 முதல்1952 வரை கிரீமிய வானியற்பியல் காணகத்தின் இயக்குநராக இருந்தார்.

இவர் சில குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். அலைவுறா வால்வெள்ளி C/1925 F1 எனும் வால்வெள்ளியை இவர் இணையாகக் கண்டுபிடித்தார். இந்த வால்வெள்ளி (சாய்ன்-கோமாசு சோலா) அல்லது வால்வெள்ளி 1925 VI அல்லது வால்வெள்ளி 1925a எனப்படுகிறது. என்றாலும், அலைவுநேர வால்வெள்ளி 61P/சாய்ன்–சுசால்டாச்சை இவரல்ல, இவரது மனைவிதான் இணையாகக் கண்டுபிடித்தார்.[1]

நிலாவின் சாய்ன் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] சிறுகோள் 1648 சாய்னா இவரது நினைவாகவும் இவரது மனைவியின் நினைவாகவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Obituary Notices : Grigori Abramovich Shajn." Monthly Notices of the Royal Astronomical Society 117 (1987): 248-49. Print.
  2. "Gazetteer of Planetary Nomenclature – Planetary Names: Crater, craters: Shayn on Moon". International Astronomical Union (IAU) Working Group for Planetary System Nomenclature (WGPSN). பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  3. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (1648) Shajna. Springer Berlin Heidelberg. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-29925-7. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
நினைவேந்தல்கள்