கிரிகொரஹ நடனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (சூன் 2021) |
கிரிகொரஹ நடனம் இலங்கையின் பூர்வீகக் குடிகளான வேடுவர்களுக்கே உரித்தானதொரு நடனமுறையாகும். இந்தக் 'கிரிகொரஹ' நடனமானது வேடுவ கூட்டத்துக்குக் கூட்டம் வேறுபடுகின்றது. இவை சிறு வேறுபாடுகளுடனேயே நடைபெறுகின்றன.
நோக்கம்
[தொகு]இந்நடனமானது வனத்தில் வேட்டையாடும் மிருகங்கள் குறைவடைந்தால் வன தெய்வத்தின் ஆசியை வேண்டி நிறைவேற்றப்படும் ஒரு விசேட செயற்பாடாகும். அத்துடன், காட்டிலுள்ள பயங்கர மிருகங்களிடமிருந்து பாதுகாப்பை வேண்டியும் நடனமாடி பூசைகளை நடத்துகின்றனர். மேலும் வேடுவ சமுகத்தின் திருமணங்கள், சடங்குகள் உள்ளிட்ட முக்கிய வைபவங்களின் போதும் இந்நடனத்தை ஆடுவர். இது அவர்களது பூர்வீகத்துடன் இணைந்தது.
இரவு நடனம்
[தொகு]இந்நடனத்தில் பங்குகொள்ளும் வேடுவர்கள் நாகமரக் கிளைகளையும், வேப்பமரக் கிளைகளையும் இடுப்பில் கட்டி தலைமுடியை பின்புறமாக அவிழ்த்துவிட்டுக் கொள்வர். ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே ஆடுவார்கள். பெரும்பாலும் இந்த ஆட்டம் இரவு நேரத்திலே ஆடப்படும்.
மாற்றம்
[தொகு]இலங்கை தம்பாளையிலுள்ள வேடுவர்களில் 'கிரிகொரஹ' நடனம் தற்போது பார்வையாளர்களுக்காக ஆடப்படும் ஒரு நடனமாகவே மாறிவிட்டது. ஏனெனில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை மகிழ்வித்து அவர்களிடமிருந்து பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதை தற்போது வேடுவர்கள் விரும்புகின்றனர்.