கேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிண்டல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

நையாண்டி என்றால் கிண்டல் அல்லது கேலி செய்தல் ஆகும். இது கிண்டலும், கேலியும் கொண்ட நாடோடிப்பாட்டையும் குறிக்கும். சில நேரங்களில் சிரிக்க அல்லது நகைக்க வைக்கும் மொழியைக் (வார்த்தையைக்) குறிக்கும்.

சங்க இலக்கியத்தில் நையாண்டியான பாடல் இடம்பெற்றுள்ளன. இதனை வசைப்பாட்டு என்றும் அழைப்பர். ஔவையார், தன்னை நையாண்டி செய்த ஒரு புலவரை வசைபாடிய ஒரு பாடல் பின்வருமாறு.

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

நாடக இலக்கியத்தில், நையாண்டி உத்தியை முதன் முதலில் கி.மு 500 களில் ஏதென்ஸ் நாட்டின் அரிஸ்டொபனீஸ் என்பவர் பயன்படுத்தினார். இவர் சுமார் 40 நையாண்டி நாடகங்களை படத்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலி&oldid=2965176" இருந்து மீள்விக்கப்பட்டது