கிசெப்பே டோர்னடோரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசெப்பே டோர்னடோரே
பிறப்பு27 மே 1956 (அகவை 67)
Bagheria
பணிஇயக்குநர், இயக்குனர்
விருதுகள்European Film Academy Special Jury Award, European Film Award – People's Choice Award for Best European Film

கிசெப்பே டோர்னடோரே (Giuseppe Tornatore) நன்கு அறியப்பட்ட இத்தாலிய திரைப்பட இயக்குநராவார்.

இவர் இத்தாலியின் பகேரியாவில் 1956 மே 27 இல் பிறந்தார். தனது பதினாறாவது வயதில் பிராண்டலோ, டி ஃபிலிப்போ ஆகியோரது நாடகங்களை அரங்கேற்றம் செய்தார். தொடர்ந்து பல ஆவணப்படங்களை இயக்கினார். எத்னிக் மைனாரிட்டி ஒஃப் சிசிலி என்ற ஆவணப்படம் சாலெர்னோ திரைப்பட விழாவில் அவருக்கு விருது பெற்றுத்தந்தது. தொலைக்காட்சிக்காகவும் இவர் சில நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.

1984 இல் குசெப்பே பெராரா இயக்கத்தில் வெளியான சென்டோ ஜியோர்னி எ பாலெர்மோ என்ற படத்தில் இரண்டாம் யூனிட் இயக்குநராக பணியாற்றினார்.

தனது முதல் படமாக 1986 இல் தி புரொபெசர் என்ற முழுநீள திரைப்படத்தை இயக்கினார். நிகழ் உலக தாதாக்களைப்பற்றிய இப்படம் அவருக்கு பரவலான அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது.

சினிமா பரடைசோ[தொகு]

1989 இல் அவரது இயக்கத்தில் வெளியான சினிமா பரடைசோ என்றபடம் அவருக்கு உலகளாவிய பெயரைப் பெற்றுத்தந்ததுடன் மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

இப்படம் பெற்றுக்கொடுத்து விருதுகளில் சில வருமாறு,

இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள்[தொகு]

  • தி புரோபெசர்
  • சினிமா பரடைசோ
  • தி ஸ்தார் மேக்கர்
  • தி லெஜன்ட் ஒஃப் 1990
  • மெலீனா

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசெப்பே_டோர்னடோரே&oldid=2733595" இலிருந்து மீள்விக்கப்பட்டது