கிங் எட்வர்டு பாய்ன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிங் எட்வர்டு பாயின்ட்
கிங் எட்வர்டு பாயின்ட் மற்றும் கிரிட்விகன் பகுதிகளைக்கொண்ட தாட்ச்சர் தீபகற்பம்

கிங் எட்வர்டு பாயின்ட் (King Edward Point, மாற்றுப்பெயர் KEP) துறைமுக வசதிகளுடன் கூடிய தென் சியார்சியா மற்றும் சாண்ட்விச் தீவுகளின் தலைநகராகும். இது தென் சியார்சியா தீவுகளின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. பால்க்லாண்ட் தீவிலிருந்து 1400 கி.மீ. (800 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. பூலோக அடிப்படையில் 54°17′S 36°30′W / 54.283°S 36.500°W / -54.283; -36.500 இல் கும்பர்லேண்ட் கிழக்கு வளைகுடாவில் அமைந்துள்ளது. இதனை சில நேரங்களில் கிங் எட்வர்ட் மலைக்குகையின் எல்லையில் அமைந்துள்ள மூடப்பட்ட திமிங்கல வேட்டை துறைமுகமான கிரிட்விகென் நகர் என தவறுதலாக அறிந்துகொள்ளப்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

கிங் எட்வர்டு பாயின்ட்டிற்கு நீர்வழி மற்றும் உலங்கு வானூர்தி வழி போக்குவரத்து மட்டுமே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]