கா. பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதைவேள் கா. பெருமாள்
பிறப்புகா. பெருமாள்
(1921-10-01)1 அக்டோபர் 1921
நாமக்கல், இந்தியா
இறப்புஆகத்து 17, 1979(1979-08-17) (அகவை 57)
தொழில்எழுத்தாளர்
தேசியம்சிங்கப்பூர்
வகைசிறுகதை, கட்டுரை, கவிதை

கவிதைவேள் கா. பெருமாள் (அக்டோபர் 1, 1921 - ஆகத்து 17, 1979)[1] சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், நாடகாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழகத்திலுள்ள நாமக்கல் என்னும் ஊரில் 1921ல் பெருமாள் பிறந்தார். 1938ல் மலாயா வந்த இவர் கேமரன் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ்மீது கொண்டிருந்த தாகத்தின் காரணமாக உலஊழியனார் என்ற அறிஞரிடம் தமிழைக் கற்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து காயக் என்னும் பகுதியில் படைப்பிரிவுக்குத் தலைமையேற்று வழிநடத்திய பெருமைக்குரியவர். 1942க்கு முன்பிருந்தே புதிய கோணங்களில் உருவகப் பாடல்கள், உரைப் பாடல்கள், உரைப்பா நாடகங்கள், வில்லுப்பாட்டு, கூத்துக்கலை, தோட்டப்புறக் கும்மி, கோலாட்டங்கள் முதலியவற்றைப் படைத்துள்ளார்.

சிங்கப்பூர் தேசபக்திப்பாடல்கள் பலவற்றை எழுதி வானொலியில் ஒலிபரப்பினார். சங்கமணி, ஜனோபகாரி, முத்தமிழ் முதலிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. சிங்கப்பூர் கலாசார அமைச்சின் கண்ணோட்டம் என்ற இதழில், இவரது பாடல்கள் “சிங்கப்பூர் பாடல்கள்” என்ற தலைப்பில் வெளிவந்தன. இசைச்சித்திரங்கள், வாழ்க்கை வினோதம் ஆகிய படைப்புகளை வானொலியில் தயாரித்தார். இஸ்லாம் சமயக் கருத்துகளை உள்ளடக்கிய சீறா இசைச் சித்திரம், துங்கு அப்துல் ரஹ்மான் வில்லுப்பாட்டு ஆகிய இசைச் சித்திரங்களைத் தயாரித்தார்.

சிறந்த கட்டுரையாளராகவும் திகழ்ந்த இவர் தத்துவக்கலை, கூத்துக்கலை, நாடகம் பிறந்தது, மலைநாட்டு உழைப்போர் இலக்கியம் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

சிங்கப்பூர் வானொலியில் ஒலியேறிய இவரது ‘கட்டை விரல் ‘ நாடகம் மிகவும் பேசப்பட்டது. சிறந்த படைப்பாளியும் பண்பாளருமான இவர் 17.08.1979ல் இயற்கை எய்தினார்.

வெளியிட்டுள்ள நூல்கள்[தொகு]

  • சிங்கப்பூர் பாடல்கள்
  • துயரப் பாதை – 1978
  • கட்டை விரல் – நாடகம் – 198
  • அன்பு எனும் தத்துவம் இஸ்லாம் – கவிதை

அமைப்புகளில் வகித்த பொறுப்புகள்[தொகு]

  • மலேசிய செய்தித் தொடர்புத் துறை - 1951
  • சங்கமணி கிழமை இதழ் - உதவி ஆசிரியர் -1958 -59
  • மலேசியா, சிங்கப்பூர் வானொலி நிலையங்கள்
  • சங்கமணி நாளிதழ் - உதவி ஆசிரியர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்". 27-04-2018. பார்க்கப்பட்ட நாள் 2019-10-17. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._பெருமாள்&oldid=2816979" இலிருந்து மீள்விக்கப்பட்டது