காவ்ய மீமாம்சா
Appearance
காவ்ய மீமாம்சா என்பது கவியரசர் இராஜசேகரர் எழுதிய வடமொழி நூல். நூலாசிரியர் தம் குடும்பப் பெயரான யாயாவரா என்பதையே தன் புனைபெயராக இந்நூலில் பயன்படுத்தியுள்ளார். இவர் கூர்ஜர அரசர் முதலாம் மகேந்திரபாலரின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் செய்யுளின் இலக்கணத்தைப் பற்றியது. இந்நூலுக்கு மதுசூதன மிஸ்ரர் விரிவுரை எழுதினார். இந்நூலின் 18 பாகங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.