காளமன் (நடுகல் வீரன்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமுதாயத்திற்காக விரோதிகளை எதிர்த்து தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு, பழந்தமிழர்கள் நினைவு சின்னமாக `நடுகல்’ எனப்படும் வீரக்கல்லை நட்டனர். அவர்கள் நடுக்கல்லை நட்டது மட்டுமின்றி அவர்களை, பழந்தமிழர்கள் வழிபாடும் செய்தனர். மேல்வேலூர் என்ற ஊரில், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற கயவர்களிடமிருந்து, அப்பெண்ணை மீட்டு தன்னுயிரை ஈந்த காளமன் என்ற வீரனுக்கு கம்பவர்மன் காலத்தில் நடப்பட்ட நடுக்கல் உள்ளது. [1]
- ↑ சிவசுப்பிரமணியன், ஆ. (1974). நடுகல் வீரர்கள் சிலர். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 926.