கால்பந்தாட்ட ஆடுகளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீர்தர ஆடுகளமொன்றின் அளவுகள். அனைத்து ஆடுகளங்களும் ஒரே அளவுகளைக் கொண்டவை அல்ல. இருப்பினும் பல தொழில்முறை அணிகளின் அரங்கங்கள் 105 by 68 மீட்டர்கள் (115 yd × 74 yd) உடன் 7,140 சதுர மீட்டர்கள் (1.76 ஏக்கர்கள்) பரப்பைக் கொண்டுள்ளன. ஓல்டு டிராஃபோர்டு களம் இந்த அளவுள்ளது; மற்ற ஆட்களங்களின் அளவுகள் இதனையொட்டியே உள்ளன.

கால்பந்தாட்ட ஆடுகளம் (அல்லது கால்பந்து மைதானம்[1] அல்லது சாக்கர் களம்) கால்பந்தாட்டம் விளையாடுவதற்கான புற்றரையாலான பரப்பு ஆகும். இதன் அளவுகளும் குறியிடுதல்களும் கால்பந்தாட்டச் சட்டங்களின் முதல் சட்டத்தால் வரையறுக்கப்படுகின்றன.[2]

ஆடுகளத்தில் இடப்படும் அனைத்துக் கோடுகளும் அவை வரையறுக்கும் பகுதியின் அங்கமாகின்றன. காட்டாக, எல்லைக்கோட்டின் மீதுள்ள பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். அதேபோல கோல் பரப்பிற்கான கோட்டிற்கு மேலுள்ள பந்து கோல் பரப்பில் உள்ளது. 16.5 மீட்டர் (18 கஜம்) தொலைவிலுள்ள கோட்டின் மீது இழைக்கப்படும் விதிமீறல் தண்டப் பரப்பில் நிகழ்ந்த விதிமீறலாகக் கருதப்படும். பந்து எல்லைக் கோட்டை முழுவதுமாக கடந்து சென்றாலே ஆடுகைக்கு புறத்த பந்தாக கருதப்படும். கோல் கம்பங்களுக்கிடையே கோல் கோட்டை முழுவதுமாக கடந்த பந்தே இலக்கை எட்டியதாகக் கொள்ளப்படும். பந்தின் எந்தப் பகுதியாவது கோட்டின் மீதிருந்தால் பந்து ஆட்டதில் உள்ளதாகவே கொள்ளப்படும்.

இவ்விளையாட்டு இங்கிலாந்தில் தோன்றியமையாலும் ஐஎஃப்ஏபியில் பிரித்தானிய கால்பந்துச் சங்கங்களின் முதன்மைப்படுத்தலாலும் ஆடுகளத்தின் அளவுகள் இம்பீரியல் அலகுகளில் உள்ளன. தற்போதையச் சட்டங்கள் இவற்றை மெட்ரிக் இணைமாற்றாகவும் தரப்படுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]