காலோத்தர ஆசிரியர்
Appearance
காலோத்தர ஆசிரியர் கி.பி. 1400ஐ ஒட்டி வாழ்ந்த ஒரு புலவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவர் இயற்றிய நூல்களில் ஒன்றான தேவி காலோத்தரம் என்னும் நூலின் பெயரால் இவ்வாறு இந்த ஆசிரியரைக் குறிப்பிடுகிறோம். சர்வ ஞானோத்தரம் என்பது இவர் இயற்றிய மற்றொரு நூல்.
வடமொழியில் உள்ள உபாகம [1] சாத்திர நூல்களில் தேவி காலோத்தர ஆகமம், சர்வ ஞானோத்தர ஆகமம், கந்த காலோத்தர ஆகமம் என்பன சில. இவற்றில் முதல் இரண்டு வடமொழி ஆகமங்களை இவர் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார். இந்த நூல்கள் இரண்டும் சிவாக்கிர யோகிகள் பரம்பரையாகிய சூரியனார் கோயில் [2][3] ஆதீனத்தின் பிரமாண நூல்கள்.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ உப ஆகமம்
- ↑ "சூரியனார் கோயில்ர 1". Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
- ↑ சூரியனார் கோயில் 2