உள்ளடக்கத்துக்குச் செல்

காலநிலை ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலநிலை ஆண்டு (அல்லது சூரிய ஆண்டு) என்பது சூரியன் (பூமியிலிருந்து பார்க்கும்போது) பருவகாலங்களில் அதே இடத்திற்கு மீண்டும் வர எடுத்துக்கொள்ளும் கால அளவு ஆகும்;காட்டாக வேனிற்கால சம இரவு நாளிலிருந்து மீண்டும் அதே வேனிற்கால சம இரவு நாளுக்கு வர எடுக்கும் நேரம்.[1]

புவியின் நீள்வட்டப்பாதை நகர்தலினால் இப்பாதையின் எந்த புள்ளியிலிருந்து இவ்வாண்டு கணக்கெடுக்கப்படுகிறது என்பதனைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை காலநிலை ஆண்டுகளின் நேரத்தில் வேறுபாடுகள் உள்ளன. காட்டாக, சூரியன் வடக்கிலிருந்து தென்திசை திரும்பும் நாளை அடிப்படையாக கொண்ட காலநிலை ஆண்டிற்கும் சம இரவு நாட்களை அடிப்படையாகக் கொண்ட காலநிலை ஆண்டிற்கும் வேறுபாடு உண்டு. இதனால் சராசரி காலநிலை ஆண்டு வரையறுக்கப்படுகிறது. சிறப்பாக குறிப்பிடப்படாவிடின், காலநிலை ஆண்டு என்பது சராசரி காலநிலை ஆண்டையே குறிக்கும்.

தவிர புவியோட்டதின் வட்டப்பாதை சூரியனின் ஈர்ப்பினால் சற்றே தாக்கமடைவதால், விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய நகர்வினை கணிக்கும் விண்மீன் ஆண்டினை விட சற்றே குறைவானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jean Meeus and Denis Savoie, "காலநிலை யாண்டின் வரலாறு", Journal of the British Astronomical Association 102 (1992) 40–42.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலநிலை_ஆண்டு&oldid=3378469" இலிருந்து மீள்விக்கப்பட்டது