உள்ளடக்கத்துக்குச் செல்

காலங்கா போர் நினைவுச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலங்கா போர் நினைவுச் சின்னம்
Khalanga War Memorial
அமைவிடம்தேராதூன்
ஆள்கூற்றுகள்30°20′35″N 78°05′53″E / 30.343141°N 78.098147°E / 30.343141; 78.098147
பரப்பளவுதிப்பனாலா பானி,சகாசுத்திராதாரா சாலை
கட்டப்பட்டது1814
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
காலங்கா போர் நினைவுச்சின்னம் is located in உத்தராகண்டம்
காலங்கா போர் நினைவுச்சின்னம்
உத்தராகண்டம் இல் காலங்கா போர் நினைவுச் சின்னம்
Khalanga War Memorial அமைவிடம்
காலங்கா போர் நினைவுச்சின்னம் is located in இந்தியா
காலங்கா போர் நினைவுச்சின்னம்
காலங்கா போர் நினைவுச்சின்னம் (இந்தியா)

காலங்கா போர் நினைவுச்சின்னம் (Khalanga War Memorial) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய நினைவுச்சின்னமாகும். 1814 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலோ-நேபாளப் போரின் முதல் போராகக் கருதப்படும் நல்பானி போரில் ஆங்கிலேயர்களுடன் போராடிய கோர்கா வீரர்களின் நினைவாக இந்நினைவிடம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] போர் வரலாற்றில் எதிரிகளுக்காக இராணுவத்தால் கட்டப்பட்ட உலகின் ஒரே நினைவுச்சின்னம் காலங்கா போர் நினைவுச்சின்னம் என்று விவரிக்கப்படுகிறது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் கோர்காக்களின் வீரத்தைக் கண்டு அப்போரால் ஈர்க்கப்பட்டனர். கோர்காக்களின் தைரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் அடையாளமாக, தாக்குதல் நடத்திய பிரித்தானியப் படைகளுக்கு பொறுப்பான படைத்தலைவர் உரோலோ கில்லெப்பி மற்றும் கேப்டன் பல்பத்ரா குன்வார் ஆகியோரின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் பராமரிக்கப்படுகிறது.[2] ஒவ்வோர் ஆண்டும் படையினரை நினைவுகூருவதற்கும், கோர்காக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் இங்கு ஒரு கண்காட்சி நடைபெறுகிறது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Why Khalanga is important for the Gorkhas | Dehradun News - Times of India". The Times of India.
  2. Pioneer, The. "Nepalese Army chief visits Khalanga War Memorial, pay tributes to martyrs". The Pioneer.
  3. "43rd annual Khalanga mela celebrates Gorkha history & culture | Dehradun News - Times of India". The Times of India.
  4. "45th annual Khalanga Mela celebrated with much fervour in Dehradun | Dehradun News - Times of India". The Times of India.