காலகண்டி உத்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலகண்டி உத்சவம்
Kalahandi Utsav
அதிகாரப்பூர்வ பெயர்காலகண்டி உத்சவ குமாரா
தொடக்கம்சனவரி 14
முடிவுசனவரி 17
நிகழ்வுஆண்டுதோறும்

காலகண்டி உத்சவம் (Kalahandi Utsav) இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள பவானிபட்னா மற்றும் தரம்கரில் நடைபெறும் ஒரு திருவிழா அல்லது ஒரு கண்காட்சியாகும். கலகண்டி உத்சவ் குமுரா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. திருவிழாக் குழுவினருடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆண்டுதோறும் இத்திருவிழாவைக் கொண்டாடுகின்றன.[1] உலகளவில் ஒடிசாவின் கலை, கலாச்சாரம், இசை, நாடகம், இலக்கியம், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை ஊக்குவிக்கவும், காட்சிப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் ஒரு தளமாக கலகண்டி உத்சவம் திகழ்கிறது.[2]

வரலாறு[தொகு]

காலகண்டியின் முன்னாள் ஆட்சித் தலைவரான பி. கே. இயெனா, 1997-ஆம் ஆண்டு காலாகண்டி உத்சவை முதன்முதலில் தொடங்கினார். ஆரம்பத்தில் இது குமுரா மகோத்சவம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பின்னர் [3] 2003 ஆம் ஆண்டில் முன்னாள் துணை ஆட்சியர் வி. கார்த்திகேய பாண்டியனால் தரம்கரில் துணைக் கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இடம்[தொகு]

பவானிபட்னாவில் உள்ள லால் பகதூர் விளையாட்டரங்கத்திலும் தரம்கரில் உள்ள பஞ்சாயத்து விளையாட்டு அரங்கத்திலும் இக்கண்காட்சித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இரண்டு இடங்களிலும் 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. [4]

நிகழ்ச்சிகள்[தொகு]

மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நாட்டுப்புற நடனக் குழுக்கள் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.[5]

தயாரிப்பு[தொகு]

பவானிபட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் சம்சுக்ருதி அனுத்தான் என்ற கலாச்சார அமைப்பானது காலாகண்டி மாவட்டத்தின் உள்ளூர் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. [6]

படக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About District | Kalahandi District: Odisha" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
  2. "Kalahandi Utsav winds up on Thursday". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
  3. "Kalahandi Utsav - GHUMURA - 2018 at Bhawanipatna, Kalahandi". allevents.in (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
  4. "Kalahandi Utsav of Folk Art Forms". The New Indian Express. Archived from the original on 2019-01-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
  5. Pioneer, The. "Kalahandi Utsav 'Ghumura' kicks off". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
  6. "Folk artists of Kalahandi performed traditional Ghumura Dance at Daya Mahotsava". Development News (in ஆங்கிலம்). 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலகண்டி_உத்சவம்&oldid=3685506" இலிருந்து மீள்விக்கப்பட்டது