காற்புள்ளி
, | |
---|---|
காற்புள்ளி | |
U+002C , COMMA (HTML , · , ) | |
காற்புள்ளி என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள நிறுத்தற் குறியீடுகளில் ஒன்று. ஆங்கிலத்தில் கமா (comma) என்று அழைக்கப்படும் இச்சொல் கிரேக்க மொழியின் கொம்மா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.
பயன்பாடு[தொகு]
ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி இடப்படுகிறது. இடப் பெயர்களை எழுதவும் காற்புள்ளி பயன்படுகிறது. ஐரோப்பிய மொழிகளிலேயே பல்வேறு வடிவத்திலான காற்புள்ளிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான மொழிகளில் காற்புள்ளிகளின் பயன்பாடு காணப்படுகிறது.