கார்போ வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்போ வேதியியல் (Carbochemistry) என்பது புகைமிகு நிலக்கரி, அனல்மிகு நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, கிராபைட்டு, மரக்கரி போன்ற கரிவகைகள் பயனுள்ள பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களாக மாற்றமடைவதைப் பற்றி ஆய்வு செய்கின்ற ஓர் அறிவியல் பிரிவாகும். கார்பனாக்கல் மற்றும் கற்கரியாக்கம் போன்ற வளிமநீக்க முறைகள், வளிமயேற்ற முறைகள், கரியை நீர்மமாக்கல் போன்ற செயல்முறைகள் கார்போ வேதியியலில் பயன்படுத்தப்படுகின்றன. கார்பனாக்கல் மற்றும் கற்கரியாக்கம் போன்ற வளிமநீக்க முறைகள், வளிமயேற்ற அல்லது வளிமமாக்கல் முறைகள், கரியை நீர்மமாக்குவதற்காக கார்போ வேதியியலில் பயன்படுத்தப்படும் செயல்முறைகள் ஆகும்.

வரலாறு[தொகு]

கார்போ வேதியியலின் தொடக்கம் 16 வது நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அக்கால கட்டத்தில் இரும்புத் தாதுக்களை உருக்குவதற்கு அதிக அளவில் மரக்கரி தேவைப்பட்டது. மரங்களிலிருந்து பெறப்படும் மரக்கரி மிகமெதுவான செயல்முறையில் நடைபெறுவதால் கரியைப் பற்றிய ஆய்வுகள் முக்கியத்துவம் பெற்றன. தூய நிலக்கரியின் பயன்பாடு கடினமானதாக இருந்தது, ஏனெனில் இதிலிருந்து திரவ மற்றும் திடப்பொருட்கள் மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டன. எனவே மரக்கரி உற்பத்தியை மேம்படுத்த மரங்கள் உலைகளில் உட்செலுத்தப்பட்டு சுட்ட நிலக்கரி தயாரிக்கப்பட்டது. யான் கிளேட்டான் 1684 இல் நிலக்கரி வாயுவைக் கண்டறிந்தார். நிலக்கரி எரியும்போது நிலக்கரி வாயு உருவாகிறது என்பதை இராயல் கழகத்தில் விவரித்தார் [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. An Experiment concerning the Spirit of Coals, von John Clayton, Philosophical Transactions, 1735, Nr. 452, S. 59
  2. Walter T. Layton: The Discoverer of Gas Lighting: Notes on the Life and Work of the Rev. John Clayton, D.D., 1657-1725. London, 1926
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போ_வேதியியல்&oldid=2318192" இலிருந்து மீள்விக்கப்பட்டது