கார்போனியம் அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்போனியம் அயனி (Carbonium ion) என்பது இணைதிறன் ஐந்தாக உள்ள கார்பன் அணுவைக் கொண்டுள்ள எந்தவொரு நேர்மின் அயனியையும் குறிப்பிடுவதாகும் [1][2]. பொதுவாகக் கார்போனியம் அயனி என்ற பெயர் மெத்தேனியம் (CH+
5
) வகைச் சேர்மங்களின் எளிய உறுப்பினரைக் குறிக்கப்பயன்படுகிறது. இங்கு இச்சேர்மத்தின் ஐந்து இணைதிறன்களும் ஐதரசன் அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளன [3].

மெத்தேனியத்திற்கு அடுத்த கார்போனியம் அயனியின் எளிய உறுப்பினருக்கு இரண்டு கார்பன் அணுக்கள் இருக்கின்றன. எத்தைனியம் அல்லது புரோட்டானேற்ற அசிட்டிலீன் (C
2
H+
3
) மற்றும் எத்தீனியம் (C
2
H+
5
) போன்ற அயனிகள் வழக்கமாக வேறு வகையான குடும்பங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. எத்தேனியம் அயனி (C
2
H+
7
) அகச்சிவப்பு நிறமாலையியல் ஆய்வுகளில் அடர்வு குறை வாயுவாக பார்க்கப்படுகிறது.[4]

தற்பொழுது கார்பீனியம் என்றழைக்கப்படும் அயனியையே முற்கால நூல்கள் கார்போனியம் அயனி என்று அழைத்தன, வேதியியலர் சியார்சு ஆண்ட்ரூ ஓலா 1972 [1] ஆம் ஆண்டில் தற்கால கார்போனியம் அயனிக்கான வரையறையை முன்மொழிந்தார். இவ்வரையறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெண்டா(டிரைபீனைல்பாசுபீன் தங்கம்(1)மெத்தேனியம் (Ph
3
PAu
)
5
C+
, என்ற அணைவுச் சேர்மம் ஒரு நிலைப்புத்தன்மை கொண்ட கார்போனியம் அயனியாக உள்ளது. சிக்மித்பவுர் மற்றும் பிறர் இந்த அணைவுச் சேர்மத்தை உருவாக்கினர்

தயாரிப்பு[தொகு]

ஆல்க்கேன்களை மிக வலிமையான அமிலங்களுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலமாக கார்போனியம் அயனிகளைத் தயாரிக்க முடியும். தொழிற்சாலைகளில் பெட்ரோலியம் பிரித்தெடுத்தலின் போது முதனிலை வெப்பச் சிதைவில் இவை உருவாக்கப்படுகின்றன

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 George Andrew Olah (1972). "Stable carbocations. CXVIII. General concept and structure of carbocations based on differentiation of trivalent (classical) carbenium ions from three-center bound penta- of tetracoordinated (nonclassical) carbonium ions. Role of carbocations in electrophilic reactions". J. Am. Chem. Soc. 94 (3): 808–820. doi:10.1021/ja00758a020. 
 2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Carbonium ion". Compendium of Chemical Terminology Internet edition.
 3. Doo Wan Boo and Yuan T. Lee (1995), "Infrared spectroscopy of the molecular hydrogen solvated carbonium ions, CH+
  5
  (H
  2
  )n (n=1–6)". J. Chem. Phys. volume 103, page 520; எஆசு:10.1063/1.470138
 4. L. I. Yeh, J. M. Price, and Y. T. Lee (1989), "Infrared spectroscopy of the pentacoordinated carbonium ion C
  2
  H+
  7
  ". Journal of the American Chemical Society, volume 111, pages 5591-5604. எஆசு:10.1021/ja00197a015
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போனியம்_அயனி&oldid=2980537" இருந்து மீள்விக்கப்பட்டது