கார்னோவின் தேற்றம் (வெப்பவியக்கவியல்)
Appearance
வெப்பவியக்கவியலில் கார்னோவின் தத்துவம் (Carnot's principle) என்பது திருப்பவல்ல (reversible) வெப்ப இயந்திரங்களின் திறன், அது வேலை செய்யும் வெப்ப இடைவெளியைப் பொறுத்ததே அல்லாமல் வேலைசெய்யும் பொருளினைப் பொறுத்தது அல்ல. தனிவெப்ப அலகில் இயந்திரம் ஏற்ற வெப்பத்தின் அளவு T! என்றும் வெளியிட்ட வெப்பத்தின் அளவு T2 என்றும் கொண்டால் இயந்திரத்தின் செயல் திறன் T1-T2/T1 எண்ணுக்குச் சமம். இதுவே கார்னோவின் தத்துவமாகும்.
கார்னோவின் தேற்றம் (Carnot's theorem) இரு குறிப்பிட்ட வெப்பநிலைகளில் செயல்படும் எல்லா திருப்பவல்ல இயந்திரங்களும் ஒரே செயல்திறனுடையதாக இருக்கின்றன என விளக்கும் தேற்றமாகும்.