உள்ளடக்கத்துக்குச் செல்

காரீய அங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரீய அங்கி ( ) என்பது கதிரியல் துறையில் பணியாற்றும் மருத்துவர், தொழில் நுட்பனர், செவிலியர், நோயாளியின் உடன் உதவிக்கு வந்துள்ள நபர் என்று பலரும் கதிர்படம் எடுக்கும் போது நோயாளின் அருகில் இருக்கநேர்ந்தால், பாதுகாப்பிற்காக அணியப்படுவது ஆகும். காரீய அங்கியினை அணிந்து கொள்ளவது அவர்களுக்கு கதிர் வீச்சிலிருந்து பாதுகாப்பினைக் கொடுக்கும். ரப்பருடன் காரீயம் கலந்து சிறப்பாக ஆக்கப்பட்டது இந்த அங்கி. இதில் 0.25 மி.மீ.கன அளவிற்கு காரீயம் உள்ளது. நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் சிதறிய கதிர்களை தடுத்து நிறுத்த இது உதவும். கதிர்மருத்துவத்தின் போது வெளிப்படும் ஆற்றல்மிக்கக் கதிர்களைத் தடுக்க இது பயன்படாது. நீண்ட நாட்கள் பயன்பட, அங்கியினைக் கவனமாகக் கையாள வேண்டும். அதனைக் கண்டபடி மடக்கக் கூடாது.பயன்பாட்டிற்குப் பின் ஒழுங்காக தொங்க விட வேண்டும். துறையிலுள்ள ஒளிர்திரையில் அவ்வப்போது அங்கியில் கீறல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரீய_அங்கி&oldid=1491140" இலிருந்து மீள்விக்கப்பட்டது