காயத்ரி தேவி (பீகார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி தேவி (பீகார்)
காயத்ரி தேவி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
முன்னவர் இராம் நரேசு பிரசாத் யாதவ்
தொகுதி பரிகார்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1964 (1964-01-01) (அகவை 59)[1]
அரசியல் கட்சி பாஜக
பணி அரசியல்வாதி

காயத்ரி தேவி என்ற காயத்ரி யாதவ் (பிறப்பு 1964) பீகாரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2015-ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பரிகார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தேவி பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்லி பிரான் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்.[4]

வாழ்க்கை[தொகு]

தேவி பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம் நரேசு பிரசாத் யாதவின் மனைவி ஆவார்.[5] இவரது கணவர் இராம் நரேசு யாதவ், சீதாமரி ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் சிறையில் உள்ளார்.[6]

அரசியல்[தொகு]

1990ல் தேவி அரசியலில் சேர்ந்தார். சீதாமரி பாஜக பெண் பிரிவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் பரிகார் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் தனது நெருங்கிய போட்டியாளரான இராச்டிரிய ஜனதா தள ராம்சந்திர பூர்வேவை தோற்கடித்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_தேவி_(பீகார்)&oldid=3595916" இருந்து மீள்விக்கப்பட்டது