கான்ட்ரி-நீவா

ஆள்கூறுகள்: 15°54′31″N 78°14′08″E / 15.90861°N 78.23556°E / 15.90861; 78.23556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்ட்ரி-நீவா சுசாலா சரவந்தி திட்டம்
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம்சிறீசைலம் நீர்த்தேக்கம்
 ⁃ அமைவு15°54′31″N 78°14′08″E / 15.90861°N 78.23556°E / 15.90861; 78.23556
 ⁃ ஏற்றம்253 மீ (830 அடி)
முகத்துவாரம்மல்யாலா
நீளம்569 கிலோமீட்டர் (354 மைல்கள்)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅடிவிபள்ளி
 ⁃ சராசரி164.8 m3/s (5,820 cu ft/s)

இந்தியாவில் இராயலசீமாவில் உள்ள கான்ட்ரி-நீவா சுசாலா சரவந்தி திட்டம் (Handri-Neeva Sujala Sravanthi project) தான் மிக நீளமான நீர் கால்வாய் திட்டமாகும். சிரிசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து வெள்ள நீரைக் கொண்டு வந்து பாசன வசதி மற்றும் குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.[1][2] முதல் கட்டமாக மல்யாலாவில் தொடங்கி, இராயலசீமாவின் நான்கு மாவட்டங்களில் ஆறு லட்சம் ஏக்கருக்கு நீப்பாசனம் செய்யப்பட்டது, இரண்டாம் கட்டமாக சித்தூர் மாவட்டத்திற்கு நீர்ப்பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி செய்ய திட்டமிடப்பட்டிருந்து.[3] இந்த கால்வாயானது, கான்ட்ரி நதி, பென்னா நதி, சித்ராவதி நதி, பாபக்னி நதி, மாண்டவ்யா நதி, பகுடா நதி, செயேரு நதி, கர்கேயா நதி, வேதாவதி நதி, பாலார் நதி மற்றும் இராயலசீமா வட்டாரத்திற்குப்பட்ட பல நதிகளை இணைக்கிறது. இக்கால்வாய் கர்னூல், அனந்தபூர், கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களிலும் பரவி காணப்படுகிறது.[1] இந்த கால்வாய் இப்பகுதியிலுள்ள பல நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் தொட்டிகளுக்கு போதுமான நீரை வழங்குகிறது. இப்பகுதியின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நீரின் முழு தேவைகளையும் அடைவதற்கு, 50 டி.எம்.சி.டி.க்கு மேல் நீர் தேவைப்படுகிறது.

வரலாறு[தொகு]

இந்த திட்டத்தை சர் ஆர்தர் காட்டன் உருவாக்கினார்,.[4] இருப்பினும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது என்.டி.ராமராவ் அரசாங்கத்தின் போது தான்.[5] 2004 ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[6]

இத்திட்டத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.[7][8] கிருஷ்ணா நதியிலிருந்து வரும் உபரி நீரைப் பயன்படுத்த இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.;[1][8] இருப்பினும் இக்கால்வாய் இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட இராயலசீமா மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு நீர் பங்கீடு செய்து கொடுக்குமா என்பதை உறுதிப்படுத்த முடியாது.ராயலசீமாவில் நீர்ப்பாசன திட்டங்களை விரைவாக முடிக்க பல அரசியல் உறுப்பினர்கள் கோரினர்.[7] கிருஷ்ணா நதியின் இருகரைநில மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவை ஆற்றின் நீரைப் பகிர்வது தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளன.[9]

செயல்திட்டம்[தொகு]

ஏறக்குறைய 550 கி.மீ நீளமுள்ள மேல் மல்யாலாவில் உள்ள சிரிசைலம் நீர்த்தேக்கத்தின் பின்புறமிருந்து புறப்பட்டு, மலை முகடுகளுடன் சித்தூர் மாவட்டத்தில் கர்னூல், அனந்தபூர் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வழியாக பல நீர் உயர்த்திகளையும் மற்றும் நீர் இறைவை நிலையங்களையும் கொண்டது..[10] இந்த கால்வாய் தற்போதுள்ள பல நீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட ராயலசீமா வட்டாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவைப்படும் குடிநீர் மற்றும் பாசன நீரை உறுதி செய்வதே இக்கால்வாயின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணா ஆற்றில் இருந்து கிட்டத்தட்ட 40 டி.எம்.சி.டி நீரைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மல்யாலா நீர் இறைத்தல் நிலையத்தின் குறைந்தபட்ச நீர் ஏற்றும் அளவு 830 அடி (253 மீ) எம்.எஸ்.எல்..[11] 30 டி.எம்.சி.எஃப் தண்ணீரை உந்தித் தர ஆண்டுக்கு 653 மெகாவாட் மின்சாரம் மற்றும் 1.9 பில்லியன் கிலோவாட் மின் ஆற்றலும் ஆகும்.

சூடிபள்ளி நீர்த்தேக்கம் வரை கால்வாயின் முதல் கட்டம் (220 கிலோமீட்டர் நீளம்) நிறைவடைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சின்னா முசுடூர் கிராமத்திலும், முதலாம் கட்டத்தில் கட்டப்பட்ட 3 சமநிலை நீர்த்தேக்கங்கள், அதாவது, 1. கிருஷ்ணகிரி (கர்னூல் மாவட்டம்), 2.பதிகொண்ட நீர்த்தேக்கம் (கர்னூல் மாவட்டம்) மற்றும் 3. ஜீடிபள்ளி நீர்த்தேக்கம் (அனந்தபுரம் மாவட்டம்) ஆகியவற்றில் அமைந்துள்ளது.

ஆதிவிப்பள்ளி நீர்த்தேக்கம் சித்தூர் மாவட்டம் வரையிலான முக்கியமான கால்வாயின் இரண்டாம் கட்டம் (349 கிலோமீட்டர் நீளம், 75% பணிகள் நிறைவடைந்துள்ளது). வட்டாரத்தின் 293 கிராமங்களில் 4,04,500 ஏக்கர் பரப்பளவில் பாசனத்திட்டம் மற்றும் 23 லட்சம் மக்கள்தொகைக்கு குடிநீர் வசதிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய கால்வாய் மற்றும் நீர் திறக்கும் கடடுப்பாட்டு பகுதிக்கு செல்லும் வழியில் 26 கிளை கால்வாய்கள் 3 கிளை கால்வாய்கள் மடகசிரா, புங்கனூர் மற்றும் நிவா, மற்றும் 3 நீர் பகிர்மானங்களை, அதாவது ராயலசீமா மாவட்டங்களின் வறட்சி நிலப்பரப்பு பகுதிகளில் உள்ள ஆத்மகுரு, தம்பல்லப்பள்ளி, வயல்பாடு, அதாவது வேலிகல்லு அணை நீர்த்தேக்கம் உட்பட ஆறு நீர்த்தேக்கங்களுக்கு நீர் நிரப்ப அனந்தபூர், கடப்பா மற்றும் சித்தூர் நீர் நிரம்புகிறது இதில் ஆறு நீர்த்தேக்கம் உட்பட வேலிகல்லு அணை நீர்த்தேக்கமும் அடங்கும். மற்றும் இரண்டாம் கட்டத்தில் கட்டப்பட்டசமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை, அதாவது 1. கோல்லப்பள்ளி நீர்த்தேக்கம் (அனந்தபுராமு மாவட்டம்), 2. செர்லோபள்ளி நீர்த்தேக்கம் (அனந்தபுராமு மாவட்டம்), 3. மராலா நீர்த்தேக்கம் (அனந்தபுரம் மாவட்டம்), 4. சீனிவாசபுரம் நீர்த்தேக்கம் (கடப்பா). மற்றும் ஆதிவிப்பள்ளி நீர்த்தேக்கமாகும் (சித்தூர் மாவட்டம்). கடுமையான வறட்சியின் போது குடிநீரை வழங்க துங்கபத்ரா உயர் மட்ட கால்வாய் மற்றும் பென்னா நதி படுகையில் உள்ள பல நடுத்தர மற்றும் சிறு தொட்டிகளையும் ஈர்ப்புவிசை மூலம் திட்ட கால்வாய்கள் நீரினை வழங்க முடிகிறது. இந்த கால்வாய் வறட்சி காலங்களில் கூட இந்த திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக அனந்தபூர் மாவட்டத்தின் கிருஷ்ணா நதி படுகையில் அமைந்துள்ள பைரிவானி திப்பா நீர்த்தேக்கம் மற்றும் பிற நடுத்தர மற்றும் சிறு நீர்ப்பாசன தொட்டிகளுக்கும் தண்ணீர் அளிக்கிறது. பச்சாவத் தீர்ப்பாய விருதின் கீழ் கிட்டத்தட்ட 45 டி.எம்.சி.டி நிறுவனமான கிருஷ்ணா நீர் ஒதுக்கீட்டைக் கொண்ட பெரிய, நடுத்தர மற்றும் சிறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு (துங்கபத்ரா உயர் மட்ட கால்வாய் உட்பட) கிருஷ்ணா நதிநீரை வழங்குவதற்கான மாற்று ஆதாரமாகவும் இந்த கால்வாய் செயல்படுகிறது.

கடுமையான வறட்சி ஆண்டில் கூட குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த மேலெழும் கால்வாயை செயல்படுத்துவதற்கு, சுன்சேசுலா தடுப்பணையிலிருந்து பெறப்பட்ட கே.சி. கால்வாய் நீரை ஈர்ப்பு விசையால் இந்த நீரிறைக்கும் நிலையத்திற்கு ஈர்ப்புவிசை மூலம் நீர் விசையியக்கக் குழாய்களின் உதவியோடு வழங்க முடியும்.

முச்சுமாரியில் உள்ள ஒரு மிகைநிரப்பு நீர் இறைக்கும் நிலையமானது சிரிசைலத்திலிருந்து நீர்த்தேக்கத்திலிருந்து 800 அடி (244 மீ) நீரைப் பெற்றுக் கொள்கிறது. எம்.எஸ்.எல் என்பது மிக உயர்தரமான கட்டப்பட்ட கட்டுமானமாகும். இராயலசீமா வட்டாரத்தில் குடிநீர் தேவைகளுக்காக மிக மோசமாக பருவமழை பொய்த்து போகும் போது கூட மிகக் குறைந்த சேமிப்பான நீரிலிருந்து அருகிலுள்ள கே.சி. கால்வாய் மற்றும் கான்ட்ரி நீவா மேலிறைக்கும் கால்வாயின் வழியாக மல்யாலா நீரிறைக்கும் நிலையம் ஆகியவற்றிற்கு இந்த நீரிறைக்கும் நிலையத்தினால் நீாினை வழங்க முடியும்.i[11][12]

கோல்லப்பள்ளி[தொடர்பிழந்த இணைப்பு] நீர்த்தேக்கத்தின் - ஒரு பார்வை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Govt. of Andhra Pradesh, Water Resources Department. "HANDRI NIVA SUJALA SRAVANTHI PROJECT- PHASE I". HANDRI NIVA SUJALA SRAVANTHI PROJECT- PHASE I. பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-17. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Hindu, The (27 May 2015). "Handri-Neeva project". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/handrineeva-project/article7249344.ece. 
  4. "Jalayagnam can be fruitful only in unified State: JAC" (in en-IN). The Hindu. 2010-04-10. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article747480.ece. 
  5. "Hundri-Neeva: lifeline of parched Rayalaseema" (in en-IN). The Hindu. 2012-11-18 இம் மூலத்தில் இருந்து 2013-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130106035815/http://www.thehindu.com/news/states/andhra-pradesh/hundrineeva-lifeline-of-parched-rayalaseema/article4106468.ece. 
  6. "Handri-Neeva details".
  7. 7.0 7.1 Hindu, The (16 March 2016). "Handri Neeva, Galeru Phase I to be completed by June". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/handri-neeva-galeru-nagari-phase-i-to-be-completed-by-june/article8361171.ece. 
  8. 8.0 8.1 Indian Express, The New (9 December 2013). "Handri-Neeva, Galeru-Nagari Projects in Rayalaseema May Go Without Water". http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Handri-Neeva-Galeru-Nagari-Projects-in-Rayalaseema-May-Go-Without-Water/2013/12/09/article1936294.ece. 
  9. Chronicle, Deccan (9 September 2014). "Water brings Telangana State and Andhra Pradesh close". http://www.deccanchronicle.com/140909/nation-politics/article/water-brings-telangana-state-and-andhra-pradesh-close. 
  10. "Handri Neeva Sujala Sravanti (HNSS) JI00011". Archived from the original on 23 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. 11.0 11.1 "Handri Neeva Sujala Sravanti (Phase I) project". பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
  12. "Devineni inspects Muchumarri project works". பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ட்ரி-நீவா&oldid=3928786" இலிருந்து மீள்விக்கப்பட்டது