காந்தி (இதழ்)
Appearance
காந்தி 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தெ.ச. சொக்கலிங்கம் ஆவார். இது காந்தி பற்றிய செய்திகளையும், உலக நடப்புகளையும், சுதந்திரத்திற்கான செயற்பாடுகளையும், நாடகவழியிலான கருத்து விதைப்பும், சிறுவர்களுக்கான பக்கங்களையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.