காந்தத் தயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புறக் காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்படும் ஒரு அயக்காந்தப் பொருள் காந்தப்புலத்தின் திசையிலேயே காந்தமாக்கம் அடையும்; அவ்வாறு ஒரு திசையில் காந்தமாக்கப்பட்ட அயக்காந்தப் பொருள், காந்தமாக்கும் புலத்தைச் சுழியாக்கிய பின்னரும் தன் காந்தத்தன்மையை இழக்காது. இவ்வாறு, காந்தமாக்கும் புலத்தைப் பொறுத்து காந்தத்தன்மை பின் தங்கும் நிலை காந்தத் தயக்கம் (magnetic hysteresis) எனப்படும். இத்தயக்கத்திற்குக் காரணம் அயக்காந்தப் பொருளில் காணப்படும் காந்தத் திரளங்களே. ஒரு முறை இத்திரளங்களை திசையமைத்து விட்டால், மீண்டும் இவற்றைப் பழைய நிலைக்குக் கொண்டு வர ஆற்றல் தேவை; அயக்காந்தப் பொருள்களுக்கே உரித்தான இந்த காந்த நினைவுப்பண்பு

 • நிலைக் காந்தங்களை உருவாக்கவும்
 • (இரும்பு, குரோமிய ஆக்சைடுகளின் காந்த நினைவுப்பண்பு) ஒலிநாடாப் பதிவிலும்
 • கணினித் தகடுகளில் தகவல்களை காந்த முறையில் சேமிக்கவும் பயன்படுகிறது.[1]
 • இந்த காந்த பண்பு குறைவாகயுள்ள அயக்காந்தப் பொருட்கள், மின் காந்தம் உருவாக்கப் பயன்படுகிறது.

கலைச்சொற்கள்[தொகு]

 • அயக்காந்தப் பொருள் - ferromagnetic material
 • காந்தமாக்கம் - magnetisation
 • காந்தமாக்கும் புலம் - magnetising field
 • காந்தத் திரளங்கள் - magnetic domains
 • திசையமைத்தல் - orientation
 • காந்த நினைவு - magnetic memory
 • ஒலிநாடாப் பதிவு - tape recording
 • கணினித் தகடு - computer disk

குறிப்புதவி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தத்_தயக்கம்&oldid=2300440" இருந்து மீள்விக்கப்பட்டது