காநிங் கோட்டை நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காநிங் கோட்டை சேவை நீர்த்தேக்கம் (சீன மொழி: 福康宁备水池, ஆங்கிலம்:Fort Canning Service Reservoir), சிங்கப்பூரின் காநிங் கோட்டைக் குன்றின் மீது உள்ள ஒரு சேவை நீர்த்தேக்கமாகும்.[1] ராணுவத்தால் முன்பு பயன்படுத்தப்பட்ட இடத்தில் இந்த நீர்த்தேக்கம் 1926 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பெரிய நீர்த்தேக்கங்களில் இருந்து சிறிய சேவை நீர்த்தேக்கங்களுக்கு நீரேற்றிகளின் உதவியுடன் நீர் அனுப்பப்படுகிறது, இதனால் கீழே உள்ள வீடுகளுக்கு நீர் தடையின்றி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கம் கட்டப்படும் முன்னர் இப்பகுதி மக்களின் தண்ணீர்த் தேவையை இங்கிருந்த ஊற்று ஒன்றின் நீர் பல நூற்றாண்டுகளாக நிறைவு செய்துவந்துள்ளது.

சான்றுகள்[தொகு]