காதுப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காதுப்புழு (earworm) என்பது என்பது மானிடர் செவிமடுக்கும் இசை அல்லது பாடல் ஒன்றின் ஒரு பகுதி அவர்களின் காதுகளில் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் நிகழ்வாகும். காலையில் வானொலியில் கேட்கும் பாடலை அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பலரும் அனுபவித்து இருப்பர். ஒரு காதுப்புழுவை அகற்றுவதற்கான வழி இன்னொரு காதுப்புழுவை அனுமதிப்பதே ஆகும்.


ஜேம்ஸ் கெல்லாரிஸ் என்பவர் செய்த ஆராய்ச்சியின் படி 98 விழுக்காடு மக்கள் காதுப்புழுவை அனுபவித்திருக்கின்றனர். இருபாலரும் இதை சரி சமமாக அனுபவித்தாலும் பெண்டிரில் இது நீண்ட நாட்கள் இருப்பதாகவும் எரிச்சலூட்டும் விதமாய் அமைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.[1]

சில நேரங்களில் காதுப்புழு நிகழ்வு மன நோயின் அறிகுறியாகவும் இருக்கும். இந்தியாவைச் சேர்ந்த ஓர் 21 வயது இளைஞனின் காதுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 35 முறை இந்தி திரைப்படப் பாடல்கள் ஒவ்வொரு முறையும் 45 நிமிடம் வரை திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. சக்தி வாய்ந்த மருந்துகளாலும் இதைக் குணப்படுத்த முடியவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதுப்புழு&oldid=1362922" இருந்து மீள்விக்கப்பட்டது