காட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் என்றும், அம்பாள் மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்.

இச்சிவாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சுந்தரேசுவரர் கிழக்கு நோக்கியுள்ளார். அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி உள்ளார்.

கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை சிலைகள் அமைந்துள்ளன. இக்கோயிலின் தென் மேற்கில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானை உடனுறை சண்முகர் சன்னதி வட மேற்கிலும் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.

விழாக்கள்[தொகு]

  • பிரதோசம்
  • திருவாதிரை

ஆதாரங்கள்[தொகு]

  1. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கோயில்கள் - தினமலர் கோயில்கள்