காடோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

காடோடி என்ற நூலானது நக்கீரன் என்பவரால் எழுதப்பட்டது.காடு என்பது கனவு நிலமோ, கவர்ச்சிமிக்க சுற்றுலாத் தலமோ அல்ல. இப்போது காடுகள் குறித்துப் பேசுவதும், கானுலா செல்வதும் மேட்டுக்குடிக்கு, மேல்நடுத்தரக் குடிமக்களுக்கு ஓர் உயர் வகை பொழுது போக்காக உள்ளது என்று கூறுகிறார்.

தொல்குடிகளின் வாழ்வு[தொகு]

பல்லுயிரிகளின் ஒழிப்பு மட்டுமல்லாது தொல்குடிகளின் வாழ்வையும் பன்னாட்டு வணிக அரசியல் எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை ஒலியற்ற குரலில் சொல்லிச் செல்கிறது இப்புதினம்.

நூலில் உள்ள பிரிவுகள்[தொகு]

இந்த நூலில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் மரம் என்றாலே இலைகள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே என்று விளக்குகிறது.முதல் பிரிவில் 13 உட்பிரிவுகள் உள்ளன.இரண்டாம் பிரிவில் "நீங்கள் திரும்பிச் செல்லும் போது இக்காடு பெரிய பிணமாகக் கிடக்கும்.அவ்வளவு பெரிய பிணத்துக்கும் ஒரு பிணப்பெட்டி செய்து கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" என்று விளக்கப்பட்டுள்ளது.இப்பிரிவில் 7 உட்பிரிவுகள் உள்ளன.மூன்றாவது பிரிவில் "மூதாய் மரமே மன்னிப்புக் கோருகிறேன். உன் எல்லா இலைகளையும் அறிந்தே உதிர்த்தோம். உன் எல்லாக் கிளைகளையும் அறிந்தே வெட்டினோம். உன்னையும் அறிந்தே வீழ்த்தினோம்" என்று விளக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் 6 உட்பிரிவுகள் உள்ளன.

சான்றாதாரம்[தொகு]

காடோடி(2014).நக்கீரன்(ஆசிரியர்).அடையாளம் வெளியீடு, 1205/1,கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621 310, திருச்சி மாவட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடோடி&oldid=2390352" இருந்து மீள்விக்கப்பட்டது