காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வண்ணக்களஞ்சியம் காஞ்சி ஶ்ரீ நாகலிங்க முனிவர் அல்லது காஞ்சி நாகலிங்க முதலியார் (Kanchi Sri Nagalinga Minivar, 24 அக்டோபர், 1865 - 09 ஜூலை, 1950) காஞ்சிபுரத்திலுள்ள ஏகனாம்பேட்டையில் சைவ செங்குந்த கைக்கோளர்[1] குலத்தவரான ஆசிரியர் சரவணபெருமாள் முதலியாருக்கும் மனோன்மணி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர். [2] சிறுவயதில் வீரசைவ கச்சபாலய ஐயரிடத்துத் தமிழ்க்கல்வி பயின்றனர். பிறகு சென்னையை அடைந்து அஷ்டாவதானம் பூவை கலியசுந்தர முதலியார் இடத்துத் தமிழ்க் கல்வியும் சாத்திரப்பயிற்சியும் நிரம்பப் பெற்றனர். இவர், தம் மனைவியார் காமாட்சியம்மையார் காலமான பிறகு காஞ்சி ஞானப் பிரகாசர் மடத்தில் சந்நியாசம் பெற்றனர். இவருக்கு குமாரர் மூவரும் குமாரத்தி ஒருவரும் உளர். இவர், தணிகை முருகனிடத்து நீங்காத மெய்யன்பு உடையவர். இவர் பல தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை எழுதியுள்ளார். வெளியிட்டு இருக்கிறேன் நூறு வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செங்குந்த மித்திரன் இந்த மாத இதழை தொடங்கி வைத்தவர். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்.[3][4][5][6][7]

இயற்றிய, தொகுத்த நூல்கள்[தொகு]

திருப்பணந்தாள் காசி மடாலயத் திற்கும் தொடர்புண்டு, மடாலயத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சொக்க லிங்கத் தம்பிரான் உதவி கொண்டு 'திருவுந்தியார். 'திருக்களிற்றுப் படியார்' என்னும் நூல்களை வெளியிட்டார்.  திருத்தணிகை வண்ண மஞ்சரி, தென் கடம்பன் பதிற்றுப் பத்தந்தாதி, வடபழனி மயிலேறு பெருமாள் மாலை இரட்டை மணி மாலை, திருவாமாத்தூர் வண்ணங் கள், திருவெறும்பியூர் புராணம் இவைகளை இயற்றியுள்ளார்.[8]

சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினையும் உரையுடன் ஒரு தொகுதியாகச் சேர்த்து வெளியிட்டார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முனிவர் சிவ ஞானபோத சிற்றுரை யினை வெளியிட்டார். 

1911 யில் தமிழ்மொழி அகராதி வெளியிட்டார் இந்நூல் பழமையான தமிழர் அகராதிகளில் ஒன்று.[9]

தாயுமானவர், பன்னிருதிருமுறை, காஞ்சி புராணம், காஞ்சி கட்டளைக் கலித்துறை புராணம், திருப்புகழ். சுந்தரர் தேவாரம் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காரனேஷன் தமிழ் அகராதி முதலிய பல புத்தகங்களை முனிவர் தொகுத்து வெளியிட்டார். [10]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://books.google.co.in/books?id=afxkAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+
  2. https://books.google.co.in/books?id=RzI-AQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  4. https://www.tamilheritage.org/manulogy/pubs/pubs.html
  5. https://vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F132651-kanchipuram-hriday-projects-failed[தொடர்பிழந்த இணைப்பு]
  6. https://books.google.co.in/books?id=L20sAAAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&hl=en&sa=X&ved=2ahUKEwjYnInLhontAhVq6XMBHafOBBAQ6AEwA3oECAIQAg
  7. https://books.google.co.in/books?id=RzI-AQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
  8. https://books.google.co.in/books?id=POJmAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&hl=en&sa=X&ved=2ahUKEwjYnInLhontAhVq6XMBHafOBBAQ6AEwBnoECAkQAg
  9. http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval76.htm
  10. https://books.google.co.in/books?id=RzI-AQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D