காசியாபாத் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 28°39′02″N 77°25′54″E / 28.6505°N 77.4318°E / 28.6505; 77.4318
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசியாபாத்
இந்திய ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஸ்டேசன் ரோடு, தவுலத்புரா, காசியாபாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
 இந்தியா
ஆள்கூறுகள்28°39′02″N 77°25′54″E / 28.6505°N 77.4318°E / 28.6505; 77.4318
ஏற்றம்217.00 மீட்டர்கள் (711.94 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு இரயில்வே கோட்டம்
தடங்கள்கான்பூர் - தில்லி பிரிவு
தில்லி - மீரட் - சகாரன்பூர் வழித்தடம்
தில்லி - மொராதாபாத் வழித்தடம்
நடைமேடை6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொதுவானது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
வரலாறு
திறக்கப்பட்டது1865-66
மின்சாரமயம்1971-72
முந்தைய பெயர்கள்கிழக்கிந்திய ரயில்வே கம்பனி

காசியாபாத் தொடருந்து நிலையம் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ளது. இது ஹவுரா-கயா-தில்லி வழித்தடத்தின் கான்பூர்-தில்லி பிரிவில் உள்ளது.

உள்ளூர் தொடர்வண்டிகள்[தொகு]

தேசிய தலைநகர்ப் பகுதியில் செல்லும் உள்ளூர் ரயில்களும் நின்று செல்கின்றன. இது புது தில்லி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து 27.5 கி.மீட்டரிலும், பழைய தில்லி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து 25.1 கி.மீட்டரிலும், ஹசரத் நிசாமுதீன் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து 28.9 கி.மீட்டரிலும், ஆனந்து விகாரில் இருந்து 18.0  கி.மீட்டரிலும் அமைந்துள்ளது.[1]

வசதிகள்[தொகு]

இந்த நிலையத்தில் தங்கும் அறைகளும், குளிர்நீர் வசதியும் உள்ளன. புத்தகக் கடைகளும், முன்பதிவு அலுவலகங்களும் உள்ளன. [1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Ghaziabad". Make my trip. http://www.makemytrip.com/railways/newdelhi.html. பார்த்த நாள்: 28 ஜூன் 2013. 

இணைப்புகள்[தொகு]