காக்கா கம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கம்பைப் பிடித்தல்
கம்பைத் தட்டல்

காக்கா கம்பு தெருவில் சிறுவர் விளையாடும் நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று.

ஆட்ட விவரம்[தொகு]

இது கல்லுக்குச்சி விளையாட்டைப் போன்றது. ஆனால் குச்சியின் நீளம் அவரவர் உயரம் இருக்கும். எல்லாருடைய கையிலும் குச்சி இருக்கும். ஏதோ ஒரு வகையில் பட்டவர் தீர்மானிக்கப்படுவார். பட்டவர் தன் இரண்டு கைகளாலும் தன் குச்சியை உயர்த்திப் பிடிப்பார்.

இது காக்கை கூடுகட்டச் சிறு குச்சிகளைத் தூக்கிச் செல்வது போல இருக்கும். இதனால் இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வந்தது. அவர் தூக்கிப் பிடிக்கும் குச்சியைப் பழமேறியவர்களில் ஒருவர் தன் குச்சியால் தட்டிவிடுவதும், மற்றவர்கள் அதனைத் தட்டிச்செல்வதும், பட்டவர் தன் குச்சியை மீட்க முனைவதும் முதலான நிகழ்வுகள் கல்லுக்குச்சி விளையாட்டில் நிகழ்வது போலவே நிகழும். முடிவும் தண்டனையும் அந்த விளையாட்டைப் போலவே இருக்கும்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கா_கம்பு&oldid=1036460" இருந்து மீள்விக்கப்பட்டது