கஸ்தூரி ஸ்ரீநிவாசன் டிரஸ்ட் கலை மற்றும் துணித்துறை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை கலை மற்றும் துணித்துறைக் அருங்காட்சியகம் (Kasthuri Sreenivasan Trust Art Gallery & Textile Museum) கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. துணித்துறை முன்னோடியான ஸ்ரீநிவாசன், கவின்கலைளையும் துணித்துறை பாரம்பரியத்தையும் இணைந்து காட்சிப்படுத்தும் நோக்கில் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளையை 1981 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் துவக்கினார்.

இந்த அறக்கட்டளைக்கு, 1983 இல் ஜி. வி. துரைசாமி நாயுடு ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த இடத்தில்தான் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளையின் சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, ஆகஸ்டு 29, 1988 இல் அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனால் திறந்து வைக்கப்பட்டது[1].

இங்கு பல ஓவியர்களின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல அரிய வெளிநாட்டு மூல ஓவியங்களும் அடங்கும். துணித்துறையின் வளர்ச்சியை விளக்கும் கண்காட்சியும் இங்கு உள்ளது. [2]

கோயம்புத்தூர் பகுதியைச் சார்ந்த ஓவியர்களின் வருடாந்தரக் கண்காட்சியும் நடத்தப்படுவதுண்டு.[3]

அமைவிடம்[தொகு]

கோயம்புத்தூர் அவினாசி சாலையில் (NH 47), பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரிக்கு எதிரில் சற்று தொலைவிலும், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அண்மையிலும் அமைந்துள்ளது.

ஓவியப்பயிற்சிப் பட்டறை[தொகு]

இங்கு பொங்கல் விடுமுறை நாட்களில் சித்ரகலா அகாதமியுடன் இணைந்து இலவச ஓவியப்பயிற்சிப் பட்டறையும் நடத்தப்படுவதுண்டு.

கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அருங்காட்சியக இணையதளம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]