கவிதா கௌசிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா கௌசிக்
20 வது லயன்ஸ் தங்க விருதுகளில் கவிதா கௌசிக்
பிறப்பு15 பெப்ரவரி 1981 (1981-02-15) (அகவை 43)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபர், விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001 முதல் தற்போது வரை
அறியப்படுவதுஎப்.ஐ.ஆர்
வாழ்க்கைத்
துணை
ரோனிட் பிஸ்வாஸ் [1]

கவிதா கௌசிக் (Kavita Kaushik ) (பிறப்பு: 1981 பிப்ரவரி 15) இவர் ஓர் இந்திய நடிகையாகவார். தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் என்றத் தொலைக்காட்சித் தொடரில் இவர் அறிமுகமானார்.[2] சோனி சாப் தொலைக்காட்சியில் இடம்பெற்ற தொடரான எஃப். ஐ. ஆரில் சந்திரமுகி சௌதலா என்ற வேடத்தில் நடித்ததற்காக கவிதா கௌசிக் மிகவும் பிரபலமானவர். இது இந்திய தொலைக்காட்சித் துறையில் இவரது வாழ்க்கையை நிலை நிறுத்தியது. மேலும் இவருக்கு ஒரு நல்லப் பெயரையும் பெற்றுத் தந்தது.[3] கவிதா கௌசிக் நடன மெய்ம்மை நிகழ்ச்சியான நாச் பாலியேவில் பங்கேற்றார். மேலும் ஜலக் டிக்லா ஜாவின் எட்டாவது பருவத்திலும் இவர் பங்கேற்றார்[4] சோனி சாப் தொலைக்காட்சியில் வெளியான டாக்டர் பானுமதி ஆன் டூட்டி என்ற தொடரில் கவிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கவிதா கௌசிக் 1981 பிப்ரவரி 15 அன்று தில்லியில் பிறந்தார்.[6] இவர் முன்னாள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான தினேஷ் சந்திர கௌசிக் என்பவரின் மகளாவார். [7] இவர் தில்லியின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் தத்துவத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

அறிமுகம் (2001-06)[தொகு]

கவிதா கௌசிக் தனது கல்லூரி நாட்களில் விளம்பரம், நிகழ்ச்சிகளை தொகுத்தல் மற்றும் நிகழ்ச்சியினை தொகுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். 2001ஆம் ஆண்டில் இவர் குடும்பம் என்றத் தொடருக்காக புதுதில்லிக்குச் சென்று பின்னர் மும்பைக்குச் சென்றார். [3] குடும்பம் சோப் ஓபராவில் பணிபுரிந்த பிறகு, கவிதா கௌசிக் கஹானி கர் கர் கீயில் என்றத் தொடரில் மன்யா தோஷியின் பாத்திரத்தை சித்தரித்தார். பின்னர் இவர் நைனா குல்கர்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்த குங்குமம் - ஏக் பியாரா சே பந்தன் [2] தினமும் பிற்பகலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மேலும் பியா கா கர் மற்றொரு பிரபல தொலைக்காட்சி தொடரான ரீமிக்ஸ், என்பதில் இவர் பல்லவி என்ற வேடத்தில் நடித்திருந்தார். தும்ஹரி திஷா என்ற தொடரிலும், சி.ஐ.டி சப் இன்ஸ்பெக்டர் என்றத் தொடரில் அனுஷ்கா என்ற ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.[8]

திருப்புமுனை மற்றும் வெற்றி (2006–15)[தொகு]

ஒரு விருது நிகழ்ச்சியில் கவிதா

தொழில்துறையில் தனது ஆரம்ப நாட்களில், கவிதா கௌசிக் தனது உயரமான சட்டகம் மற்றும் கவர்ச்சியான ஆளுமை காரணமாக பெரும்பாலும் கவர்ச்சியான மற்றும் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்து வந்தார்.[3] 2006ஆம் ஆண்டில் எஃப்.ஐ.ஆரில் சந்திரமுகி சௌதாலா என்ற பாத்திரத்தில் நடிக்கக் தொடங்கினார். இது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை வழங்கியது. மேலும் அந்த நேரத்தில் இவருக்கு வழங்கப்படும் எதிர்மறை வேடங்களில் இருந்து ஒரு முறிவை ஏற்படுத்தியது.[9] சிட்காம் ஒரு வணிக மற்றும் விமர்சன வெற்றியை நிரூபித்தது. 1000 அத்தியாயங்களை நிறைவு செய்தது. ஹரியானவி உச்சரிப்பில் பேசும் ஒரு துணிச்சலான பெண் காவலரின் பாத்திரம் கௌசிக் இந்திய தொலைக்காட்சியின் புகழ்பெற்ற முகமாக மாறியதுடன், இவருக்காக பல பாராட்டுகளையும் பெற்றது.[10] சந்திரமுகி சௌதாலாவின் கதாபாத்திரம் இந்திய தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.[11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கவிதா கௌசிக் சக தொலைக்காட்சி நடிகர் கரண் குரோவருடன் உறவு கொண்டிருந்தார். மேலும் இவர்கள் பிரபல ஜோடிகளின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான நாச் பாலியே 3 இல் பங்கேற்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்த ஜோடி பிரிந்தது.[12][13] இவர் தனது சிறந்த நண்பர் ரோனிட் பிஸ்வாஸை 2017இல் திருமணம் செய்து கொண்டார்.

குறிப்புகள்[தொகு]

 1. FIR actor Kavita Kaushik gets married in the lap of Kedarnath mountains. See pics. Indian Express (28 January 2017). Retrieved on 14 January 2018.
 2. 2.0 2.1 "Got the guts!". தி இந்து. 21 August 2009. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/got-the-guts/article659589.ece. 
 3. 3.0 3.1 3.2 "Chandramukhi's Case Files". இந்தியன் எக்சுபிரசு. 21 September 2013. http://archive.indianexpress.com/news/chandramukhi-s-case-files/1172040/0. 
 4. "Jhalak Dikhhla Jaa 8: Meet 12 Final Contestants; All You Need To Know About The Show [In Pics"]. Focus News. 11 July 2015 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910073937/http://focusnews.com/entertainment/jhalak-dikhhla-jaa-8-list-of-final-contestants-revealed-all-you-should-know-about-the-show-in-pics/54408/. 
 5. "Kavita Kaushik to play an army doctor in her new show". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 April 2016. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Kavita-Kaushik-to-play-an-army-doctor-in-her-new-show/articleshow/51891672.cms. 
 6. "Kavita Kaushik birthday: Bikini photos of the F.I.R. actress will leave you agape and asking for more!". டைம்ஸ் நௌவ். 15 February 2019. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
 7. . 
 8. "Kavita Kaushik". http://www.bollywoodlife.com/celeb/kavita-kaushik/. 
 9. "Chandramukhi Chautala's F.I.R. completes 8 years on TV". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 August 2014. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Chandramukhi-Chautalas-F-I-R-completes-8-years-on-TV/articleshow/39418403.cms?. 
 10. "Kavita Kaushik is back on F.I.R., Chitrashi Rawat asked to quit". இந்தியன் எக்சுபிரசு. 1 July 2013. http://archive.indianexpress.com/news/kavita-kaushik-is-back-on-f.i.r.-chitrashi-rawat-asked-to-quit/1136221/. 
 11. "Famous comic characters of Indian television". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 April 2015. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Famous-comic-characters-of-Indian-television/photostory/47095847.cms. 
 12. "19 Much-In-Love Nach Baliye Jodis Who Went Separate Ways After The Show". 12 June 2015 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305112334/https://in.lifestyle.yahoo.com/19-much-love-nach-baliye-jodis-went-separate-130537416.html. 
 13. "TV couples who should never have broken up!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/TV-couples-who-should-never-have-broken-up/photostory/46443325.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_கௌசிக்&oldid=3946478" இலிருந்து மீள்விக்கப்பட்டது