கவனம் (சிற்றிதழ்)
கவனம் என்பது 1980களின் துவக்கத்தில் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியராக ஞானக்கூத்தன் இருந்தார்.[1]
கவனம் 1981 மார்ச்சிலிருந்து வெளிவந்தது. இதில் தனித்தன்மை கொண்ட கவிதைகள், கதைகள், கட்டுரைகள் வெளியாயின. ஞானக்கூத்தன் எழுதிய பாரதியின் புதுக்கவிதை காஸ்யபன் எழுதிய நாவல் படிப்பது பற்றி (3 இதழ்களில் தொடர்ந்தது) ஆகிய குறிப்பிடத்தக்க கட்டுரைகள் வெளியாயின. 1981 மார்ச் மாதம் துவக்கப்பட்ட கவனம், 1982 மார்ச்சில் வந்த ஏழாவது இதழுடன் நின்றுவிட்டது..[1] கவனம் இதழ்கள் தொகுக்கபட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. 13 நவம்பர் 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சொல்வனம், இதழ் 272, 12 சூன் 2022