உள்ளடக்கத்துக்குச் செல்

களிப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களிமண் குவார்ட்சு போன்றவற்றின் கலவையான களிப்பாறை, படிவுப்பாறை வகைகளில் ஒன்று.

களிப்பாறை (shale) என்பது மெல்லிய களிமண் துண்டுகளும், குவார்ட்சு, கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் சிறு துண்டுகளும் சேர்ந்து இறுகிய ஒருவகையான படிவுப்பாறை (sedimentary rock) ஆகும். இதில் களிமண்ணும் பிற கனிமங்களும் வெவ்வேறு அளவினதாகக் கலந்து இருக்கும். களிப்பாறை பல சன்னமான இணை அடுக்குகள் அல்லது பாளங்களின் தொகுப்பாய், இடையில் விரிசல் கொண்டனவாய் இருக்கும். இவ்வடுக்குகளின் திண்மம் ஒரு செ.மீ அளவிற்கு இருக்கும். இதே அளவிற்குக் கூறுகளைக் கொண்ட பிற பாறைகள் இருந்தாலும், அவை துகள்களின் அளவு சிறிதாக இருக்கும் காரணத்தால் நன்கு உறுதியாக இருக்கும். களிப்பாறைகளோ களிமண் துகள்களின் இணை அடுக்குகளின் பண்பின் காரணமாக சன்னமான இணை அடுக்குகளாய் உடையும் தன்மை உடையனவாக இருக்கும்.

கலந்திருக்கும் பிற கனிமங்கள், தாதுக்கள் இவற்றைப் பொருத்துக் களிப்பாறைகள் வெவ்வேறு நிறத்தைப் பெரும். காட்டாக, கரிமப் பொருட்களின் கலவையால் சில களிப்பாறைகள் கரிய நிறத்தில் இருக்கும். இவற்றைக் 'கரும் களிப்பாறை' எனலாம். பிற இரும்பு சார்ந்த கனிமப் பொருட்களால் சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களும், மைக்கா போன்றவற்றால் பச்சை நிறமும் பெறும். படிவுப்பாறைகளில் பெரும்பான்மையாக அமைந்திருப்பது களிப்பாறையே.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Blatt, Harvey and Robert J. Tracy (1996) Petrology: Igneous, Sedimentary and Metamorphic, 2nd ed., Freeman, pp. 281–292 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-2438-3
  2. "Rocks: Materials of the Lithosphere – Summary". prenhall.com. Archived from the original on 24 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2007-07-31.
  3. Boggs, Sam (2006). Principles of sedimentology and stratigraphy (4th ed.). Upper Saddle River, N.J.: Pearson Prentice Hall. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0131547283.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களிப்பாறை&oldid=3889913" இலிருந்து மீள்விக்கப்பட்டது