உள்ளடக்கத்துக்குச் செல்

கல் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல் மரம் என்பது தாவரங்கள் மண்ணுள் புதைந்து பாறைப் படிவ நிலைமையில் இருப்பதைக் குறிக்கும். அதுவே பல கல் மரங்கள் ஒரே பகுதியில் இருக்குமாயின் அதைக் கல்மரக்காடு என்பதும் உண்டு. மிகப்பழமையான மரங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே வளந்திருக்கும். ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் 4 பனி யுகங்கள் உண்டானதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுவதுண்டு. அந்த காலங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் மரங்கள் மண்ணில் புதைந்துக் கல் மரங்களாகிவிடும். அந்த மரத்தின் வகையைக் கொண்டு அந்தப் புவியமைப்பின் காலத்தைக் கணிப்பதன் மூலம் ஒரு இடத்தின் தொன்மையான புவியியல் அமைப்புகளை கண்டறிய இயலும்.

விந்தைகள்[தொகு]

தொல்லுயிரியல் ஆய்வாளர்களிடையே இக்கல்மரங்கள் ஒரு விந்தையாகவே பார்க்கப்படுகிறது. அதன் காரணம் ஒரு உயிரினம் கல் மரமாகவோ மிருகமாகவோ மாற அது இறந்து அழுகும் முன்னர் அதன் உடலின் ஒவ்வொரு உயிரனுவிலும் கால்சியம் கார்பனேட்டும், சிலிகாவும் புகுந்திருக்க வேண்டும். அதுவே அந்த உயிரினம் மக்கிவிட்டால் அது கல்மரமாக ஆகமாலே ம்ண்ணில் கலந்துவிடும்.[1] அந்த விதத்தில் இதைப் போன்ற அதிவேக உயிரியல் மற்றும் கணிம மாற்றங்கள் நிகழ்த்தப்படுவது தொல்லுயிரியல் ஆய்வாளர்களிடையே ஒரு விந்தையாகவே பார்க்கப்படுகிறது.[2]

மூலம்[தொகு]

  • சு. வேல்முருகன். திருவக்கரையின் தொன்மை வரலாறும் கல் மரப்பூங்காவும். பக். 1 - 11. doi:செப்டம்பர் 23, 2012. 

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "World Book Child craft International". The world book Encyclopedia 17. World Book Child craft International - Chicago. 377. அணுகப்பட்டது செப்டம்பர் 23, 2012. 
  2. "Fossil (The Natural World)". Oxford illustrated Encyclopedia 2. 125. அணுகப்பட்டது செப்டம்பர் 23, 2012. 

உசாத்துணை[தொகு]

  • சு. வேல்முருகன் (டிசம்பர் 2005). பண்டைத் தடயம். பாரிமுனை, சென்னை: மணிவாசகர் பதிப்பகம். pp. 47–63. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_மரம்&oldid=2789449" இலிருந்து மீள்விக்கப்பட்டது