கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hepatitis B vaccine
Vaccine description
Target disease Hepatitis B
வகை Subunit
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Recombivax HB
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a607014
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07BC01
ChemSpider none N

பி வகை கல்லீரல் அழற்சிக்கானத் தடுப்பூசி என்பது பி வகை கல்லீரல் அழற்சியைத் தடுக்கவல்ல தடுப்பூசி.[1] முதல் தடுப்பூசி குழந்தை  பிறந்த 24 மணி நேரத்திற்குள் போட வேண்டும், அதன் பிறகு மேலும் இரண்டு அல்லது மூன்று தடுப்பூசிகள் போட வேண்டியிருக்கும். எச் ஐ வி /ஏய்ட்ஸ் நோய் போன்ற மோசமான நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளவர்களுக்கும் முதிர்வுறாக் குழந்தைகளுக்கும் கூட இது பொருந்தும். ஆரோக்கியமானவர்களுக்கு வழமையான நோய் தடுப்பு முயற்சிகள் மூலம் 95 % க்கும் மேலானவர்களைக் காக்கலாம்.[1]

நிர்வாகம்[தொகு]

அதிக ஆபத்து இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி வேலை செய்கிறதா என தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனை செய்ய பரிந்துரைக்கபடுகிறது. மோசமான நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளவர்களுக்கு அதிக அளவு மருந்து தேவைபடும,ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு இது தேவைப்படாது. கல்லீரல் அழற்சி வகை B நுண்ணுயிர் நோய் தாக்கபட்டு தடுப்பூசி போடப்படாதவார்களுக்கு , கல்லீரல் அழற்சி வகை B நோய் எதிர்ப்பு குளோபுளின் அதிக அளவு தடுப்பூசி மருந்து கொடுக்க வேண்டியிருக்கும் தசைவழி உட்செலுத்தப்படும் .[1]

முறைப்படி பாதுகாப்பு உருவாக்குதல்[தொகு]

கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிது.. தடுப்பூசி போட்ட இடத்தில் வலி ஏற்படலாம். கர்ப்பம் தரித்திருக்கும் போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் நேரத்திலும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. இதற்கும் தசை பலவீன நோய்க்கும் சம்பந்தமில்லை. தற்போதைய தடுப்பூசி மீளிணைதிற DNA தொழில்நுட்பம் மூலம் தயார் செய்யப்பட்டது. இந்த தடுப்பூசிகள் தனியாகவும் மற்ற தடுப்பூசிகளுடன் இணைந்தும் கிடைக்கிறது [1]

வரலாறு,சமூகம் மற்றும் கலாச்சாரம்[தொகு]

முதல் கல்லீரல் அழற்சி வகை B தடுப்பூசி 1981 இல் அமெரிக்காவில் அங்கீகரிக்கபட்டது..[2] பாதுகாப்பான ஒரு பதிப்பு 1986 ஆம் ஆண்டு வெளி வந்தது..[1] இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல்,இல் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான அடிப்படை சுகாதார அமைப்பு க்கு தேவையான மருந்து.<[3] 2014 இல் ஒரு மருந்தளவுக்கான மொத்தவிலை 0.58 USD முதல் 13..20 USD ஆக இருந்தது [4] அமெரிக்காவில் அதன் விலை 50 முதல் 100 USD வரை உள்ளது..[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Hepatitis B vaccines WHO position paper". Weekly epidemiological record 40 (84): 405-420. 2 Oct 2009. http://www.who.int/wer/2009/wer8440.pdf. 
  2. Moticka, Edward. A Historical Perspective on Evidence-Based immunology. பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123983756. https://books.google.ca/books?id=2TMwAAAAQBAJ&pg=PA336. 
  3. "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
  4. "Vaccine, Hepatitis B". International Drug Price Indicator Guide. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781284057560.