கல்யாணி கஜபதி
| கல்யாணி கஜபதி Kalyani Gajapati | |
|---|---|
| பர்லாகேமுண்டி கங்கா வம்சத்தின் தலைவர் | |
| ஆட்சிக்காலம் | 10 சனவர் 2020 முதல் |
| முன்னையவர் | கோபிநாத் கஜபதி |
| அரசமரபு | கீழைக் கங்கர் (பரலக்கெமுண்டி கிளை) |
கல்யாணி கஜபதி (Kalyani Gajapati) அல்லது கல்யாணி தேவி என்பவர் பர்லாகேமுண்டி கங்கா வம்சத்தின் தற்போதைய தலைவர் ஆவார். இவர் பரலக்கெமுண்டியின் கங்கா வம்சத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆனார்.[1]
வாழ்க்கை
[தொகு]கல்யாணி கஜபதி பெங்களூரில் தனது கல்வியைத் தொடர்ந்ததாலும், சென்னை அரண்மனைக்கு எப்போதாவது சென்று வருவதாலும், தனது ஆரம்ப ஆண்டுகளை பரலகமுண்டியிலிருந்து விலகிக் கழித்தார்.
கல்யாணி கஜபதி புவனேசுவரத்தில் தனது தந்தை கோபிநாத் கஜபதி நாராயண் டியோ இறந்த பிறகு, 10 ஜனவரி 2020 அன்று 50 வயதில்[2] முடிசூட்டினார். இவர் வம்சத்தின் 17வது தலைவி இவராவார். அரண்மனை அருகே உள்ள இராமசுவாமி கோவிலில் பூஜை முடிந்ததும், கல்யாணி ஊர்வலமாகத் தர்பார் மண்டபத்திற்கோ அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இவர் இளவரசியின் உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்தாள். முடிசூட்டுக்குப் பிறகு, கல்யாணி தனது முதல் உத்தரவைப் பிறப்பித்தார்: இதன் பின்னரே இவரின் தந்தையின் இறுதிச் சடங்கு மற்றும் தகனம் நடைபெற்றது.[3]
கல்யாணி கஜபதி 2019 பிப்ரவரியில் அரசியல் கட்சியான பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.[4]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meet Kalyani, first woman Gajapati of Parala royal family". The New Indian Express. Retrieved 2020-10-09.
- ↑ "Kalyani Gajapathi(BJD):Constituency- PARALAKHEMUNDI(GAJAPATI) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2020-10-09.
- ↑ "Kalyani Gajapati Crowned As First Queen Of Paralakhemundi". ODISHA BYTES (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-11. Retrieved 2020-10-09.
- ↑ "Gajapati's royal scion joins BJD- The Hindu". The Hindu. 27 February 2019. https://www.thehindu.com/news/national/other-states/gajapatis-royal-scion-joins-bjd/article26379816.ece."Gajapati's royal scion joins BJD- The Hindu". The Hindu. 27 February 2019. Retrieved 31 December 2020.