கல்மாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிக்கற்குடை
பனிக்கல் சூறாவளிகள் இடிமின்னலின்போது பசுமை நிறத்தில் ஒளிர்தல்[1]

கல்மாரி என்பது மழையின் ஒரு வகை ஆகும் .வானில் மிகவும் உயர்ந்த பகுதியில் காற்று உறுதியற்ற நிலையில் உள்ள போது செங்குத்து வாட்டத்தில் மேகம் இருக்கும் போது கல்மாரி ஏற்படுகிறது. மேலெழும் இயக்க மிகுதியினால் மழைத்துளிகள் மிகுந்த உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உறைகின்றன. இவை செங்குத்தாக விழுவதற்கு முன்னர் இப்பனித்துகள்களின் தொகுப்பு நிகழ்கிறது .

இவ்வாறு தொடர்ந்து நிகழ்வதனால் பனித்துகள்கள் வளர்ந்து பனிக்கற்களாக மலர்ந்து மேலெழும் காற்றினால் அடித்து செல்லப்படாமல், நிலத்தின் மீது விழுகிறது. இவ்வாறு இப்பனிக்கற்கள் விழும்போது மேலெழும் காற்றுத்தாங்கலாகிறது. கல்மாரியின் உட்பகுதியில் ஒன்றன் மீது ஒன்றாகப் பல வட்டங்கள் புலப்படுவதிலிருந்து பனிப்படிகங்கள் வளர்ந்து உருவானதை அறிந்து கொள்ளலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frank W. Gallagher, III. (October 2000). "Distant Green Thunderstorms – Frazer's Theory Revisited". Journal of Applied Meteorology (American Meteorological Society) 39 (10): 1754. doi:10.1175/1520-0450-39.10.1754. Bibcode: 2000JApMe..39.1754G. 
  2. வானியலும் வேளாண்மையும் ,பொறிநர் கே .ஆர் .திருவேங்கிடசாமி, ஆகஸ்ட் 1997,I S B N :81-234-0314-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்மாரி&oldid=3743930" இருந்து மீள்விக்கப்பட்டது