கலைக்கதிர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைக்கதிர்
வெளியீட்டாளர் ஜி. ஆர்.டி அறக்கட்டளை
முதன்மை ஆசிரியர் முனைவர். தா. பத்மனாபன்
வகை அறிவியல் இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் 1948
நிறுவனம் ஜி. ஆர். டி. அறக்கட்டளை
நகரம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி கலைக்கதிர் மாத இதழ்
கலைக்கதிர் கட்டிடம்,
963, அவினாசி சாலை,
கோயம்புத்தூர் - 641 037,
தமிழ்நாடு,
இந்தியா.
வலைப்பக்கம்
Scanned images of KalaiKathir front page

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல இதழ்களில் கலைக்கதிர் அறிவியல் மாத இதழும் ஒன்று. கோயம்புத்தூர் மாநகரில் இருந்து ஜி. ஆர். டி. அறக்கட்டளை மூலம் வெளியிடப்படும் இந்த இதழின் நிறுவனர் பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் ஆவார். இதன் முதன்மை ஆசிரியராக முனைவர் தா. பத்மனாபன் என்பவரும், ஆசிரியராக டாக்டர். வி. ஆர். அறிவழகன் என்பவரும் இருந்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு முதல் வெளியாகும் இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள், செய்திகள் போன்றவை எளிய தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது. இம்மாத இதழ்தான் “முதல் தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதி”யை வெளியிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைக்கதிர்_(இதழ்)&oldid=3401304" இலிருந்து மீள்விக்கப்பட்டது